யார்யாரை நிராகரிக்க வேண்டும்? தேர்தல் களத்தில் மாணவசமூகம்!

தேர்தல் நாள் அண்மிக்க அண்மிக்க பரப்புரைகள் மும்முரமடைந்துள்ளன.
இதனிடையே மாணவ சமூகமும் தேர்தலில் யார் யார் இனை நிராகரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது.

வடகிழக்கு பேரூந்து நிலையங்களை இலக்கு வைத்து விநியோகிக்கப்படும் சர்ச்சைக்குரிய அந்த துண்டுபிரசுரம் மாணவ தரப்பினாலேயே விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தந்தை செல்வா இலங்கை யாப்பினை தீயிட்டெரிக்க சுமந்திரன் ,சம்பந்தன் வகையறா வீட்டையே தீயிட்டு எரித்த பின்னர் யாப்புடன் கூத்தாடும் கேலி சித்திரத்தை அத்துண்டு பிரசுரம் கொண்டுள்ளது.

அதிலும் சிறீதரன் தலையில் விளக்கெடுத்தாடும் சித்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.