போலி தேசியவாத அரசியல்,முடித்து வைப்பார்களா மக்கள்!

238

#கடந்தகால அரசியல் வாக்கு வெற்றி நாயகன் இந்த தடவை கடுமையாகப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

கடந்த முறை தேர்தலில் சிவஞானம் சிறீதரன் அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார் உண்மைதான் அப்பொழுது இருந்த அரசியல் களம் வேறு இப்போது இருக்கும் அரசியல் களம் வேறு.

மக்கள் அரசியலையும் புரிந்து கொண்டார்கள் அரசியல்வாதிகளையும் புரிந்து கொண்டார்கள்.இனி யார் நம்மை ஆள வேண்டும் என்பதை….

#சிவஞானம் சிறிதரன் முருகேசு சந்திரகுமார் இவர்கள் இருவருக்கும் இடையில் தான் கடந்த காலத்தில் போட்டிகள் நிலவியது கிளிநொச்சி மாவட்டத்தை பொருத்தவரை.

ஆனால் இன்று இருவருக்கும் நடுவில் அதிகமான கட்சிகள் அதிகமான வேட்பாளர்கள் களம் புகுந்துள்ளார் கிளிநொச்சி மாவட்டத்தில்….

#யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்தமுறை சிறிதரன் அவருக்கு கிடைத்த வாக்குகள் அதிகமாக உடைந்து மாற்று கட்சிகளுக்கு சென்றுவிடும். யாழ்ப்பாணத்தில் அதிக கட்சிகள் தங்கள் ஆளுமையை செலுத்தி உள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்துடன் ஒப்பிடும்பொழுது யாழ்ப்பாணத்தில்.ஆகவே கிளிநொச்சியில் இவரின் வாக்கு சரிவு வாக்குகள் எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறேன்….

#இந்த தடவை சிவஞானம் சிறிதரனின் தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக கிளிநொச்சி கிராமப்புற மக்கள் தான். அவர்களிடம்தான் இவரின் தோல்விக்கு உரிய வாக்குகள் உள்ளது….

#அரசியல் ஆரம்பத்தில் இவருக்கு இருந்த தமிழ் இன தேசிய கொள்கைகள் தற்பொழுது இலங்கை தேசிய கொள்கையாக மாற்றமடைந்து சுமந்திரன் உடன் பயணிப்பதை யாழ்ப்பாண கிளிநொச்சி அதிகமான மக்கள் வெறுக்கிறார்கள்.அதிக மக்கள் இவரை வெறுப்பதற்கு முதல் காரணம் முழுமையான தமிழ்தேசிய நீக்க அரசியலை செய்யும் சுமந்திரனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இன்றைய காலத்தில்….

#சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் அரசுக்கு ஒரு பக்கமும் பின்னர் மக்கள் பக்கம் நின்று அரசை விமர்சிப்பது இதை மக்கள் முழுமையாக புரிந்து கொண்டு விட்டார்கள் இப்பொழுது இவர் ஏமாற்ற முடியாது.கடந்த ஐந்து வருடம் இவரின் செயல்பாடுகள் முக்கியமாக விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் சுமத்திரன் சார்ந்த கருத்துக்கள்.மேலும் 75 வாக்கு கணக்கில் இவருடைய அரசியல் வாழ்க்கை இந்த தேர்தலின் பின் முடிவுக்கு வரும் உறுதியானது.அது சட்டத்தின் பிரகாரம் அதற்கான சட்ட நடவடிக்கையை இலங்கை அரசு ஆரம்பித்துவிட்டது ஆகவே இவர் தேவையற்ற ஒருவர் இனி அரசியலில்…

#கடந்த முறை அதிக பெண்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டவர்.

இந்தமுறை நேரடியாகவே பெண்கள் இவரை அதிகம் விமர்சிக்கிறார்கள் அரசியலில் இருந்து அரசியலுக்கு அப்பால் வெளியே இருந்தும் இவர் தேவையற்ற ஒருவர் என்று. மேலும் இந்த முறை அதிக பெண் வேட்பாளர்கள் களத்தில் நிற்பதால் பெண்களின் வாக்குகள் அவர்களுக்குத்தான் இவருக்கு இல்லை….

#மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கும் மலையக மக்களை இவர் வாக்குகளுக்காக தங்களை பயன்படுத்துவதை புரிந்துகொண்ட அந்த மக்கள் இன்று தெளிவடைந்து உள்ளார்கள்.இதர கட்சிகளுக்கு வாக்குகளை செலுத்துவதற்கு தயாராகிவிட்டார்கள். இவரை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என்பதற்காக சத்தம் இல்லாமல் குறிப்பிட்ட வாக்குகளை ஆறுமுகம் தொண்டமான் சார்ந்த ஒரு சுயேட்சை குழு ஒன்று அந்த வாக்கை பிரித்து செல்லப் போகிறது இதுவும் இவருக்கு இழப்பு….

#தன்னைத் தலைவனாகவும் சுமந்திரனை அண்டன் பாலசிங்கம் என்று வர்ணிக்கும் இவரை.முன்னாள் போராளிகள் அதிகமானவர்கள் இவர் மீது வெறுப்படைந்து மாற்றுக் கட்சிகள் நோக்கி பயணித்து விட்டார்கள் இவருக்கு எதிராக அதன் தாக்கமும் இவருக்கு….

#சுகபோக அரசியல் சொத்து சேர்ப்புக்கான அரசியல் மூலம் பத்தாண்டுகளில் தனது அரசியல் வாழ்க்கையில் தன்னை வளப்படுத்திக் கொண்ட சொத்துகள் விவரம் இன்று அனைத்து மக்களுக்கும் அது பகிரப்பட்டுள்ளது அதுவும் இவருக்கு கணிசமான வாக்கை சேதப்படுத்தும்.

இவர் சார்ந்து இவரின் கீழ் பயணிப்பவர்கள் மீது இருக்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெண்கள் சம்பந்தப்பட்டது முக்கியமாகிறது இதன் பாதிப்பும் இவருக்கு அதிகமாக இருக்கும்….

#மேலும் யாரை சந்தித்தாலும் இவரை ஒரு அண்டப் புளுகு ஆகாசப் புளுகு ஆசிரியர் அரசியல்வாதி என்று மக்கள் குறை கூறும் அளவுக்கு இவரின் கடந்தகால சொற்பதங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டது இதன் பாதிப்பை உணர்வார் முழுமையாக இந்தத் தேர்தலில்…

#கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது இருக்கும் கிராமபுரங்களில் சந்திரகுமார் டக்ளஸ் தேவானந்தா இன்னும் இதர கட்சிகள் அதிக ஆதிக்கம் செலுத்தி விட்டன.

இவர் மீது இருக்கும் வெறுப்பு காரணமாக காரணமாக எந்தக் கட்சிக்கு என்றாலும் இவரைத் தவிர்த்து வாக்களிப்போம் என்ற நிலைமையில் கிளிநொச்சியில் அதிக மக்களை காணக்கூடியதாக இருக்கிறது இதுவும் இவருக்கு அதிக பின்னடைவுதான்.இது அனைத்தும் சரியாக இருக்கும் ஆனால் இவரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது….

#எனது எண்ணத்தின் பிரகாரம் இவர் முற்றுமுழுதாக அரசியல் பரப்பில் இருந்து தூக்கி வீசப்பட்ட வேண்டிய ஒருவர்.அது காலத்தின் தேவையும் கூட இல்லை என்றால் நிச்சயம் எமது இனத்தை எமது மக்களை எமது மண்ணை போலித் தேசிய அரசியல் வாதிகளிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விடும் இந்த தேர்தலின் பின் முழுமையாக….

#அதிக தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் வெற்றியடைந்த பட்டியலில் பாலித தெவரப்பெரும வருவார்.அதிக பிரச்சாரம் செய்து தோல்வியடைந்த பட்டியலில் சிவஞானம் சிறிதரன் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

#நிச்சயம் இந்த தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள் அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை மக்கள் முழுமையாக தெளிவடைந்து விட்டார்கள் காத்திருப்போம்….

#இவர் அரசியலில் தமிழ் மக்களுக்கு தேவையற்ற ஒருவர் என்று பட்டால் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்…

Manikam Sinnathampi