ஹொங்கொங் விவகாரம்,சீன ஆதரவு நிலை எடுத்த சிறிலங்கா

62

ஹொங்கொங் விவகாரத்தில் சிறிலங்கா சீனாவிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளது.ஹொங்கொங் தொடர்பில் சீனாவின் உத்தேச தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலேயே சிறிலங்கா சீனாவிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளது.

சீனாவின் இறையாண்மை மற்றும் பிரதேசம் தொடர்பிலும் ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரத்திலும் சிறிலங்கா சீனாவிற்கு அதன் ஆதரவை வெளியிட்டது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சிறிலங்காவும் சீனாவும் ஒருவருக்கொருவரின் இறையாண்மையை ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகியவை குறித்து பரஸ்பரம் எப்போதும் ஆதரவை வழங்கும் மூலோபாய சகாக்கள் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கள் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் சீனா தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்துள்ளதை இது காட்டுவதுடன்,அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் சீன எதிர்ப்பு நிலைக்காக சிறிலங்காவை எதிர்க்கும் போக்குக்கு சிறிலங்கா சிங்கள இனவாத அரசு தனது எதிர்ப்பை தைரியமாக பதிவு செய்வதன் மூலம் உலகிற்கு ஒரு செய்தியை ஆழமாக சொல்லுகின்றது.சீனா உலக வல்லரசாகிவிட்டது என்ற கோணத்திலும்,அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ள பலவீன தலைமைதுவங்களினால் அவற்றை எதிர்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விடயமல்ல என்றும் கணக்கு போட்டு காய் நகர்த்துகின்றது.இந்த உலக அரசியலை தமிழர் தரப்பு எவ்வாறு பயன்படுத்த போகின்றது என்பதை தாண்டி? எவ்வளவு தூரம் ஒற்றுமையாக இயங்க போகின்றோம் என்பதுதான் எம்முன் உள்ள சவால்