கள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா?

135
[poll id= “4”]

சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு! 12 மாதம் சிறைத்_தண்டனைக்கு வாய்ப்பு?

தாம் 2004 தேர்தலில் 75 கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் கூறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீதரனின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஸ்ரீதரனின் கருத்து அமைந்துள்ள நிலையில் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் ஸ்ரான்ஸ்ஸாஸ்சினால் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைகாலமாக ஶ்ரீதரனின் பொறுப்பற்ற பேச்சுகளின் பின்னால்,ஏதோ சில வலுவான காரணங்கள் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.தேர்தலில் நிச்சயமாக வென்றுவிடுவோம் என்ற நினைப்பில் கண்டபடி உளறுகிறாரா? இல்லை ஆளும் கட்சி எதிர்கட்சி என்று கள்ளதொடர்புகளை கொண்டவரும்,ஐந்து வயதில் இருந்தே கொழும்பில் வசித்து வரும் சுமந்திரன் கூட்டணி கொடுக்கும் தைரியத்தில்,சிங்கள அரசு எதுவும் செய்யாது என்ற கோணத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றாரா? இல்லை கிளிநொச்சி பிரதேசவாதம் இம்முறையும் தனக்கு வாக்குகளை அள்ளி கொடுக்கும் என்ற தைரியமா? இல்லை “முன்னாள்” போராளிகள் சிலர் தனக்கு விசுவாசமாக வேலை செய்கிறார்கள் என்ற தைரியமா? எதுவாக இருந்த போதிலும் கெட்டிகாரன் புளுகு நெடுநாள் நிலைப்பதில்லை என்பதை அன்னார் நினைவில் வைத்துகொள்வது நல்லது.

[poll id= “2”]