20ஐ எதிர்த்து எதிர்க்கட்சி மனுதாக்கல்!

69

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட யோசனைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவினால் இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று புதன்கிழமை பகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதேவேளை, சட்டத்தரணி இந்திக்க கால்லகே நேற்றைய தினம் இப்புதிய அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிராக உச்சநீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்று சர்வஜன வாக்கெடுப்பின்றி இந்த புதிய அரசியலமைப்புத் திருத்த யோசனையை அனுமதிக்க வேண்டாம் என்று கோரி மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.