சர்வதிகார போக்கை கடைப்பிடிக்கும் ஜனாதிபதி – என் வார்த்தைகளே சுற்றறிக்கை!

143

தனது வாய்மூல உத்தரவுகளை சுற்றறிக்கையாக கருதி செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஹல்துமுல்ல பிரதேச கிராமத்திற்கு ஜனாதிபதி நேரடி விஜயம் செய்திருந்த போது சிறு வியாபாரத்திற்கு அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பில் மக்கள் முறையிட்டனர். அதன்போது உடன் இருந்த அதிகாரிகள் சுற்றறிக்கை மூலம் அறிவித்தல் வந்தால் அதனை வழங்க முடியும் என்றனர். எனினும் தனது உத்தரவை சுற்றறிக்கையாக கருதி அனுமதிப் பத்திரம் வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

ஜனாதிபதி கூறிய பின் அதுதான் சுற்றறிக்கை. விளங்குதா? நான் மிதக்கும் ஜனாதிபதி அல்ல. சரியா? ஜனாதிபதியாக நான் இப்படிதான். அப்படி இன்றேல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். இதனை நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன். பல விடயங்களை தேடியே நான் இதனை கூறுகிறேன். மக்களுக்காக இதுதான் சுற்றறிக்கை. இன்று எழுதிக் கொள்ளவும் குறித்த திகதியில் குறித்த நேரத்தில் ஜனாதிபதி கூறியதுதான் சுற்றறிக்கை. சரியா?

உங்களுடைய உயரிடத்திற்கு அதனை எழுதுங்கள். இவ்வாறான பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைக்கவும். நான் இங்குள்ள அனைவருக்கும் கூறுகிறேன். சுற்றறிக்கை என்பது ஜனாதிபதி கூறுவதுதான். எதற்கு மேல் என்ன? நிறைவேற்று ஜனாதிபதி என்பது அதுதானே.. விளங்குதா?

யுத்தம் காணப்பட்ட நேரத்தில் நாம் சுற்றறிக்கை வௌியிட்டோமா? ஜனாதிபதி சுற்றறிக்கை வௌியிட்டுக் கொண்டிருந்தால் இன்னும் யுத்தம் செய்து கொண்டிருக்க வேண்டி வந்திருக்கும். இது யுத்தம். மக்களை வாழவைக்கும் யுத்தம்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் தொனியில் தெரிவித்தார்.