வரலாற்றிலே இந்த தேர்தலில் தான் அதிகளவான நிராகரிக்கப்பட்ட வாக்குகள்!

இந்த நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே அதிகளவான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகியிருப்பது 2020 பொது தேர்தலிலே. இம்முறை நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 744,373 அதாவது 6.03.சதவீதம்.

இந்த எண்ணிக்கை பொதுத் தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சமகி ஜன பலவேகய பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைத் தவிர அதிக வாக்குகளின் எண்ணிக்கையாகவும் இது கருதப்படலாம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 135,452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதுடன் இது பதிவான வாக்குகளில் 0.85% ஆகும்.

2015 பொதுத்தேர்தலில் 517,123 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதுடன் இது பதிவான வாக்குகளில் 4.63% ஆகும்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 81,034 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இது பதிவான வாக்குகளில் 6.41% ஆகும். கம்பாஹா மாவட்டத்தில் 75,509 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன, அதன் சதவீதம் 5.79 ஆகும்.

கணிசமான எண்ணிக்கையிலான அஞ்சல் வாக்குகளும் நிராகரிக்கப்பட்டன.