இரத்தினபுரியில் பிள்ளையார் சிலை உடைப்பு!

153

இரத்தினபுரி இறக்குவானை பகுதியில் இளைஞர்களால் நிறுவப்பட்ட பிள்ளையார் சிலை ஒன்று பெரும்பான்மையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில் அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இறக்குவானை, மாதம்பை தோட்டத்தில் வீதி அபிவிருத்தி காரணமாக கோயில் காணியின் அளவு குறுகியுள்ளது.

இதனையடுத்து இளைஞர்கள் ஹபுகஸ்தென்ன பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான மாதம்பை தோட்டத்தின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள காணியில் சிலையொன்றினை ஸ்தாபித்துள்ளனர்.

அதற்கு பெரும்பான்மையினர் சிலர் எதிர்ப்பு வெளியிட்டதுடன், குறித்த சிலையும் சேதமாக்கப்பட்டுள்ளது.