ஜனாதிபதி வௌியிட்ட அதி விஷேட வர்த்தமானி!

புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இதன் படி ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி வியாழக்கிழைமை புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.