இன்னுமொரு போருக்கு நாம் தயார், புலம்பெயர்ந்த புலிகளையும் அழிப்போம் – சரத் வீரசேகர!

367

புலம்பெயர் நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலை புலிகளை முட்க்கும் நடவடிக்கையினைஇலங்கை அரசு எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொலிஸாருடன் இணைந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிச்செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

விடுதலைப் புலிகளின் தேவைகளுக்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம்.

தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் இயங்குகின்றது. நாம் இன்னொரு போருக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி இருந்தால் மட்டுமே இதனை எம்மால் கையாள முடியும்.

இந்தியாவை எமக்கு எதிராக தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.