இளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்!

148

கொஹூவல இராணுவ முகாமில் பணியாற்றிய ஒரு கோப்ரல் மற்றும் இரண்டு லான்ஸ் கோப்ரல் தரத்தையுடையவர்கள் நேற்று கொஹூவல நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கொஹூவல, ஜம்புகஸ்முல்லவில் வியாழக்கிழமை இரவு மூன்று சந்தேக

நபர்களும் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். சம்பவ இடத்திற்கு பெண்ணின் கணவர் வந்துவிட, அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

பெண்ணும், கணவரும் இராணுவ வீரர்களுடன் போராடியபோது, சம்பவ இடத்திற்கு பிரதேசவாசிகளும் உதவிக்கு வந்தனர். இதையடுத்து, ஒரு இராணுவ வீரர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். மற்ற இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மடக்கிப்பிடிக்கப்பட்டவர் முறையாக கவனிக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டர். பொலிசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய இரண்டு வீரர்கள் தொடர்பாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கொஹூவல இராணுவ முகாமுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி தப்பி ஓடிய இரண்டு வீரர்களையும் கைது செய்தனர்.