கம்பஹா மாவட்டத்தின் திவுலபிடிய பிரதேசத்தில் 39வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக அமுலாகும் வகையில் மினுவங்கொட, திவுலபிடிய ஆகிய பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த 39வயது பெண் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காய்ச்சல் முழுதுமாக குணமடைந்ததை அடுத்து வீடு செல்வதற்கு முன் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டது. பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் பணிபுரியும் பதினைந்து ஊழியர்களும் குறித்த பெண் வேலை செய்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நாற்பது பேர் வீடுகளில் தனிமைபடுத்தபட்டனர்.