இலங்கை இணையத்தள ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரான சத்துரங்க டி சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணை தொடர்பிலான செய்தியொன்றை விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெளியிட்ட குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடகவியலாளரது மடிக்கணினியையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.