முகநூல் பிரச்சாரத்திற்காக செலவிட்டதில் முன்னணியில் இருக்கும் இரு வேட்பாளர்கள்!

181

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக வேட்பாளர்கள் செலவு செய்த பணம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தப் பட்டியலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முதலிடத்தை வகித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் அங்கஜன் ராமநாதனும் உள்ளார்.

பொதுத்தேர்தல் பிரசாரங்கள் மற்றும் விளம்பரங்கள் கடந்த ஒகஸ்ட் 2ஆம் திகதியுடன் நிறைவிற்கு வந்தன.

வேட்பாளர்களும் அவர்களைச் சார்ந்த கட்சிகளும் ஆதரவாளர்களும் அக்கறையுடைய தரப்புக்களும் பெரும்தொகையான பணத்தை விளம்பரங்கள் உட்பட தேர்தல் செலவுகளுக்காக செலவிட்டுள்ளனர்.

இதில் ஃபேஸ்புக் விளம்பரங்களுக்காக உத்தியோகபூர்வமாக செலவிட்ட மொத்தத் தொகை பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே மாதம் முதல் தேர்தல் பிரசாரங்கள் நிறைவிற்கு வந்த இறுதித்தினமான ஒகஸ்ட் 2ஆம் திகதிவரை 28,510 விளம்பரங்களுக்காக 478,545 அமெரிக்க டொலர்களை அதாவது எட்டுக்கோடியே 87 லட்சத்து 83 ஆயிரத்து தொள்ளாயிரத்து 39 ரூபா 47 சதம் (88,783,939.47) ரூபாவை செலவிட்டுள்ளனர்.