வட மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்று மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்று மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதன் பின்னர் நேற்றைய தினம் தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வடமாகாணத்துக்கு என விசேட பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பொலிஸ்துறை பிளவுபடும். மாகாண பொலிஸ் தலைவர்களும் உருவாகுவார்கள். எனவே வட மாகாணத்திற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.