இலங்கை தேர்தலின் இறுதி முடிவும் கட்சிகள் பெற்ற ஆசனங்களும்!

117

நடைபெற்று முடிந்த 9வது இலங்கை பாராளுமன்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 196 உறுப்பினர்கள் கட்சிகள் அடிப்படையில் கைப்பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் நேரடியாக தெரிவு செய்யப்படுவதுடன் ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவது வழமையாகும்.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இலங்கை பொதுத் தேர்தல்-2020 இல் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரம்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள் (68 இலட்சத்து 53 ஆயிரத்து 693 வாக்குகள் – 59.09 வீதம்)

ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள் (27 இலட்சத்து 71 ஆயிரத்து 984 வாக்குகள் – 23.90 வீதம்)

இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள் (3 இலட்சத்து 27 ஆயிரத்து 168 வாக்குகள் – 2.82 வீதம்)

தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள் (4 இலட்சத்து 45 ஆயிரத்து 958 வாக்குகள் – 3.84 வீதம்)

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம்

சிறிலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம்

முஸ்லிம் தேசிய கூட்டணி – 1 ஆசனம்.