தேசியப்பட்டியல் எம்பி,மொட்டைகளுக்குள் மோதல்!

252

தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு செல்வது யார் என்பது தொடர்பில் ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இருவரிடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எமது மக்கள் சக்திக் கட்சியின் கொடி சின்னத்தின் கீழ் இவ்விருவரும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் நாடாளுமன்றம் செல்வதற்கு போதுமான வாக்குகள் கட்சிக்குக் கிடைக்கவில்லை.

எனினும் ஒட்டுமொத்த வாக்குகளை சரிபார்த்து தேசியப்பட்டியல் ஒன்று அந்தக் கட்சிக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அதனை அத்துரலிய ரத்ன தேரரா அல்லது ஞானசார தேரருக்கா பங்கிடுவது குறித்த பிரச்சினை தற்சமயம் அந்தக் கட்சிக்குள் உருவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது