என்ன ம**க்கு வாக்கு கேட்டு வருகிறீர்கள்!

140

சம்பந்தர் ஐயாவின் காலைப் பிடித்து கெஞ்சச் சொன்னீர்கள்

அவர்களும் அவர் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களே

அப்புறம் பிரதமர் ரணில் காலைப் பிடித்து கெஞ்சச் சொன்னீர்கள்

அவர்களும் அவர் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களே

அப்புறம் பிரிட்டன் பிரதமர் கமரோன் காலை பிடிக்கச் சொன்னீர்கள்

அவர்கள் அவர் காலையும் பிடித்து அழுது கெஞ்சினார்களே

யார் யார் காலை எல்லாம் பிடிக்கச் சொன்னீர்களோ

அவர்களும் அவ்வாறே அனைவரின் காலையும் பிடித்துக் கெஞ்சினார்களே

ஆனால் கடைசிவரை அவர்களது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் பற்றி

எதுவும் கூறாமலே சாகடித்து வருகிறீர்களே

உங்களுக்கு கொஞ்சம்கூட அவர்கள் மீது இரக்கம் வரவில்லையா?

படிப்படியா ஒவ்வொரு தாயாரும் செத்து விட்டால் காணாமல் போனோர் பிரச்சனையும் காணாமல் போய்விடும் என்று நினைக்கிறீர்களா?

அவர்கள் பிள்ளைகளை உங்களால் திருப்பி கொடுக்க முடியாவிட்டாலும்

அவர்கள் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக்கூட

உங்களால் இந்த பத்து வருடத்தில் கூற முடியவில்லையா?

இதுகூட முடியவில்லை என்றால் அப்புறம் என்ன ம – – க்கு வோட்டு கேட்டு வாறியள்?

தோழர் பாலன்