ஒப்புதல்வாக்குமூலத்தின் அடிப்படையில் இரண்டு வருட சிறை தண்டனை?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இரண்டு வருட சிறை தண்டனையும் வழங்க முடியும் சட்டத்தரணி தவராசா தெரிவிப்பு .

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அண்மையில் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்க முடியுமெனவும்.

ஒருவேளை அவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டல் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கமுடியும்.ஆனால் அது கடூழிய சிறைத்தண்டனையா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது என்றுதமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் சிறீதரனின் கூற்றுக்கும், தமிழரசு கட்சி சந்திக்கும் விமர்சனங்களுக்கும் தமிழ் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்குகொண்டு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.