ஜெனிவா பேரணியில் கலந்து கொண்டவர்களின் உறவுகளை அச்சுறுத்தும் இலங்கை புலனாய்வாளர்கள்!

90

கடந்த 21 ஆம் திகதி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸில் உள்ள ஜெனிவாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நபர்கள் சிலரின் வீடுகளுக்கு சென்று இலங்கை புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID ) 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு வரும்படிம் அழைப்பு விடுத்துள்ளனர்

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா நகரத்தில் கடந்த 21 ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன் செய்திகள் , படங்கள் பத்திரிகைகள் , மற்றும் இணையங்களில் வெளியான நிலையில்

அதனை அடிப்படையாக வைத்து சிறிலங்கா புலனாய்வாளர்கள் படத்தில் இருப்பவர்கள் சிலரை தேடப்படும் நபர்களாக அடையாளப்படுத்தி அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர், அதே நேரம் அவர்களது குடும்பத்தினரை 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு வரும்படி (CID ) குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தால் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளனர்.