சிறிதரன் சொன்னதை செய்ய தயாராக இருந்தால் நான் பதவி விலக தாயார் – குணாளன்!

120

சி.சிறிதரன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினால், எனது பதவிவிலகல் கடிதத்தை சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன் என அதிரடியாக அறிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிப முன்னணியின் உப செயலாளர் க.குணாளன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் “வாய்க்கு வந்ததை பேசியதில்“ முன்னணியில் இருப்பவர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். பாலசிங்கமும் சுமந்திரனும் ஒன்று என்பதில் தொடங்கி, யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து அவலத்தை சந்தித்து கொண்டிருந்த போது தலைவர் பிரபாகரன் உலக்கிண்ண கிரிக்கெட் போட்டி பார்த்துக் கொண்டிருந்தார் என பேசியது வரை ஒவ்வொரு கூட்டத்திலும் வாய்க்கு வந்ததை பேசி மக்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

இப்படியாக, சாவகச்சேரியில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் சாவகச்சேரி தொகுதி கிளை கூட்டத்தின்போது சி.சிறிதரன் இன்னொரு விடயத்தை பேசியிருந்தார்.

புங்குடுதீவை சேர்ந்த குணாளன் என்பவரை கட்சியை விட்டு நீக்கினால், நடைபெறும் பொதுதேர்தலில் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தால், எனது பதவியை துறந்து அவரை எம்.பியாக்குவேன் என தெரிவித்திருந்தார்.

அவர் சொன்னதை செய்ய தயாராக இருப்பதாக ஊடகங்களில் அறிவிப்பாராக இருந்தால், எனது பதவிவிலகல் கடிதத்தை கையளிக்க தயாராக இருக்கிறேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர், பொதுச்செயலாளருக்கு இது குறித்த கடிதங்களை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்-

எனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளோ, தனிப்பட்ட பிரச்சனைகளோ இல்லை. நான், விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், மற்றும் பல இளைஞர்கள் உயிரை பயணம் வைத்து, ஈ.பி.டி.பியின் கோட்டையாக கருதப்பட்ட தீவகத்தை பெருமளவில் மீட்டிருந்தோம்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மேற்படி சிறிதரன் என்பவர், கட்சியின் மூலக்கிளைகள், வாலிப முன்னணி என்பவற்றின் தீர்மானங்களை புறக்கணித்து தன்னிச்சையாகவே தீவகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சிறிதரன் பதவிவிலகினால் விருப்பு வாக்கின் அடிப்படையில் அடுத்த நிலையிலுள்ள சசிகலா, சரவணபவன் போன்றவர்கள் பதவிக்கு வரக்கூடுமென சிலர் சொல்லலாம். அந்த பதவி மாவைக்கே செல்லுமென்ற உத்தரவாதத்தை பெற்றுத்தர தயாராகவே இருக்கிறேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.