9வது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு சற்று முன் ஆரம்பமாகியது! .

இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவு சற்றுமுன் நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது.

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 7452 வேட்பாளர்கள் போட்டிபோடும் இத் தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை முழுவதும் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் இன்று காலை 7.00 மணி முதல் வாக்களிக்க தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் வாக்களிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.