சிறி அண்ணாவிற்கு எங்கள் கண்ணீர் வணக்கம்!

46

ஆர்ப்பரித்தெழுந்த அன்னை மண்ணின் அடங்கிடா விடுதலை தாகத்தில் ஊற்றெடுத்து நின்ற உன்னத வீரருள் உத்தமர்கள் சிலராய் நின்றவேளை, அமைதியாய் நின்றே ஆளுமை புரியும் ஒருவராய் அண்ணனின் வழிநின்ற சிறி அண்ணா, கோமகன் கனவில் கோலம் கொண்ட தேசத்தைத் தேடியே, மக்களுக்காய்த் தாய்ப்பூமியெங்கும் செழிக்கின்ற பொருண்மியம் கண்ட அரும்பணியாளரில் சிறந்தவர் நீங்கள், அதுவே போதுமென்ற எண்ணம்போலும் இப்போது விழிமூடிக்கிடக்கின்றீர், புல்லுக்கும் நோகாப் பண்பும், புன்சிரிப்பும் புத்துணர்வான பேச்சும் வீச்சின்றிப்போனது, நீங்கள் அறிவுரைத்த பொருள் முதல் வாதமும், புதுப்பொலிவோடு தேசம் காண வலம்வந்த நாட்களும் மூர்ச்சையின்றிக் கிடக்கின்றன, இருள் மூண்டு கிடக்கும் இந்த இன்னல் வேளையில், அணைகின்ற ஒவ்வோரு ஒளிதீபங்களும் எங்கள் வசந்த காலங்களில் வழிகாட்டும் பாதையின் வல்லமைகளாய் வலம்வந்தவை, எதை இழந்தாலும் இழப்புத்தான், எவரையிழந்தாலும் பேரிழப்புத்தான், ஏனெனில் இழந்துகொண்டே நலிவடைந்து கிடக்கின்ற இனமாய்த் தவித்துக்கிடக்கின்றோம், இருக்கின்றபோதே எம் தேசத்திற்காய் வழியேதும் அமைப்போம்!

சிறியண்ணாவின் ஆளுமை அப்பெருந்தலைவனால் கண்டெடுக்கப்பட்டதுபோல், அதே தலைமகனின் வழிகாட்டலில் வந்து அங்காங்கே கொட்டிக்கிடக்கும் ஆளுமைகளை ஒன்றாய்க் கோர்வையாக்கி ஒரு பெரும் தேசம்படைப்போம் வாருங்கள்! இதுவே அவர்கள் அனைவரதும் ஆத்மதாகத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை வணக்கம்! -காந்தள்-

நானும் சிறி மாஸ்டரிடம் லண்டனில்
TR-TEC கில் படித்தேன்.மிகவும் அற்புதமான மனிதர்.

சிறி மாஸ்டரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

-ஈழம் ரஞ்சன்-