நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 70 வயதை கடந்த வயதுபோனவர்கள் 10 பேர் பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.
அவர்களின் வயது விபரங்கள் வருமாறு,
1.இரா. சம்பந்தன் – வயது 89
இலங்கை தமிழரசுக்கட்சி – திருகோணமலை மாவட்டம்.
2.திஸ்ஸ வித்தாரன – வயது 85
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்
(ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நியமனம்)
3.வாசுதேவ நாணயக்கார – வயது 81
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – இரத்தினபுரி மாவட்டம்.
4.சி.வி. விக்னேஸ்வரன் – வயது 80
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – யாழ். மாவட்டம்.
5.சமல் ராஜபக்ச – வயது 77
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – அம்பாந்தோட்டை மாவட்டம்.
6.காமினி லொக்குகே – வயது 77
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – கொழும்பு மாவட்டம்.
7.மஹிந்த ராஜபக்ச – வயது 74
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – குருணாகலை மாவட்டம்.
8.ஜீ.எஸ். பீரிஸ் – வயது 74
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – தேசியப்பட்டியல்
9.மஹிந்த யாப்பா அபேவர்தன – வயது 74
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – மாத்தறை மாவட்டம்.
10. லக்ஷ்மன் கிரியல்ல – வயது 72
ஐக்கிய மக்கள் சக்தி – கண்டி மாவட்டம்.
வயதானவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஓய்வெடுக்கும் போதே,அடுத்தகட்ட தலைவர்களை அந்த சமூகம் பெற்று கொள்ளும் வாய்ப்புள்ளது.இந்த வயதானவர்கள்,தாங்கள் சாகாமல் இருந்துகொண்டே,அடுத்தவர்களையும் வாழவிடாமல் கெடுத்து கொண்டுள்ளார்கள்,இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டல்களையும் வழங்கிகொண்டுள்ளனர்.நாட்டில் உள்ள எல்லா தொழில் வேலைகளுக்கும் குறிப்பிட்ட வயதின் பின்னர் ஓய்வுதீயம் உள்ளது.ஆனால் இவர்கள் மட்டும் வயதை தாண்டி கெளரவ பிச்சை எடுத்து அந்த கதிரையிலேயே சாகும்வரை பாராளுமன்றம் செல்ல பல இளைஞர்களின் வாய்ப்புகளை பறித்து,அவர்களை கொண்டு வேலை செய்து,சமூக அமைப்பையே சீர்கெடுத்து கொடுத்து கொண்டுள்ளனர்.