சிறிலங்காவினுள் தமிழர்க்கு என்றுமே நீதி கிடைக்கப் போவதில்லை!

131

இனவெறி அரசின் வஞ்சனையால் இலங்கையில் சிறைகளுக்குள் ஆண்டுக்கணக்காக அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டு வாழ்வு தொலைத்து வாடும் அத்தனை தமிழ் அரசியல் கைதிகளும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் அனைவரும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஓயாமல் ஓங்கிக் குரல் கொடுப்பது காலத்தின் தேவை!

வாக்குக் கேட்டு மீண்டும் வரும் பதவியிலிருந்த தமிழ் அரசியல் தலைவர்களிடம் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக என்ன செய்தார்கள் எனக் கேளுங்கள்!

மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்று சொகுசு வாழ்வு வாழும் யார் மனதும் இதுவரை அரசியல் கைதிகளின் கொடும் துயர் கண்டு இரங்கவில்லை!

அரசியல் கைதிகளின் போராட்டங்களை ஏறெடுத்தும் பார்க்காத வஞ்சக இனவாத அரசின் கயமையையும் அவர்களுக்கு துணை நிற்கும் தமிழர்க்குப் பயன் தராத அரசியல் வியாதிகளையும் புறக்கணித்து மக்கள் போராட்டங்கள் நீதி கேட்டுத் தொடரட்டும்!

Sivavathani P