தேர்தல்களில் ஒரு கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்போம். ஆனால், ஒரு கட்சியைச் சேர்ந்த விருப்பு வாக்கு எண்ணிக்கையைத் தேவையான வகையில் மாற்றிக் கொள்வது சர்வ சாதாரணமாக நடந்து வந்திருக்கின்றது.
மிக அண்மைய சம்பவம், வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதிக வாக்குகளைப் பெற்றவர் அனந்தி சசிதரன்.
ஆனால், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட விக்னேஸ்வரனை விட அனந்தி அவர்கள் அதிக விருப்பு வாக்கு பெறக் கூடாது என்பதுக்காக வாக்குகள் மாற்றப்பட்டது.
2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐதேக வுக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தது. பழனி திகாம்பரமும், சிறிரங்காவும் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
உண்மையில் விருப்பு வாக்கில் முதலிடத்தில் இருந்தவர் இம்முறை திகாம்பரத்துடன் இணைந்து சஜித் அணியில் போட்டியிடும் உதயா என்பவர். சிறி ரங்கா இரண்டாவது இடத்தில் இருந்தார்.
திகாம்பரம் அந்த தேர்ததில் மலையக மக்கள் முன்னணியி;லிருந்து விலகி தேசிய தொழிலாளர் சங்கத்தில் நுழைந்துக் கொண்டிருந்தார். கட்சியின் தலைவர் தோல்வியடைவது அவமானம் என்;பதால் விருப்பு வாக்கு எண்ணிக்கை மாற்றி விட்டார்கள்.
பிரபல ஊடகவியலாளர் சிறிரங்கா தனது விருப்பு வாக்கில் கைவைக்காமல் எதையாவது செய்து கொள்ளுங்கள் என்று கண்டும் காணாமலும் விட்டார்.
உதயாவின் விருப்பு வாக்குகள் தோல்வியடைந்திருந்த திகாம்பரத்தின் விருப்பு வாக்கில் கணக்கு வைக்கப்பட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்குப் பெருந்தொகை பணம் கைமாறியிருக்க வேண்டும். ஏனெனில் பின் வந்த காலப்பகுதியில் உதயா அவர்கள் பல கோடிகளை இறைத்து தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்து நடத்தியிருந்தார்.
இது போல் பல பிரபலமான நிகழ்வுகள் உண்டு…
2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் புளோட் அமைப்புக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தனின் தம்பி துசியந்தன் அதிக விருப்பு வாக்கு பெற்றிருந்தார்.
ஆனால், இரண்டாவது இடத்திலிருந்த சித்தார்த்தன் தான் பாராளுமன்றத்துக்கு சென்றார். இவரைப் பாராளுமன்றம் செல்ல விட்டிருக்காவிட்டால் முதலாவது வந்தவரைக் கொலை செய்திருக்கும் நிலை இருந்தது. அப்போது புளொட் அரச ஒட்டுக்குழு.
இது போல் 2003 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் கூட்டமைப்பில் தோல்வியடைந்திருந்த மாவை சேனாதிராஜா வின் விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த தேர்தலிலும் யாழ் மாவட்டத்தில் தமிழ் கூட்டமைப்புகள் விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தது. வெற்றிபெற்ற அருந்தவபாலனுக்கு பதிலாக தோல்வியடைந்திருந்த உதயன் பத்திரிக்கையின் உரிமையாளர் சரவணபவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவி இருந்தது.
தேர்தல்களில் மக்களின் எண்ணங்களைத் தீர்மானிப்பது ஊடகங்கள் தான். ஊடக முதலாளிகளின் ஆதரவைப் பெறும் கட்சிகளுக்கு வெற்றி நிச்சியம். அப்படி வெற்றி பெறும் கட்சிகளிலும் அதிகாரமும், பணபலமும் உள்ளவர்கள் விருப்பு வாக்கை மாற்றிக் கொள்ள முடியும்.
இவர்கள் மக்களுக்குச் சேவை செய்வார்கள் என்று நம்புவோமாக…!
பதிவு – Richard aadhidev