பிரிட்டானிகா..ஆக்சுபோர்டு என உலகப் புகழ்பெற்ற எந்த அகராதியிலும் எந்த மொழியிலும் State என்ற ஆங்கில சொல்லுக்கு மாநிலம் அல்லது மாகாணம் என்று பொருள் கிடையாது..
State என்றால் “நிலை” அல்லது “அரசு” என்றுதான் பொருள்..நிலைத்த அரசைக் குறிக்கவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது..
United States of America என்றால் அமெரிக்க அரசுகளின் ஒன்றியம் என்று பொருள்..
ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் State என்பதை மாநிலம் என்றே மொழிப்பெயர்க்கின்றன..!
இதேபோல் “லோக்சபா” என்பதை சரியாக “மக்களவை” என மொழிப்பெயர்க்கும் ஊடகங்கள் “ராஜ்யசபா” என்பதை “அரசவை” என்று சொல்லாமல் “மாநிலங்களவை” என்று மொழிப்பெயர்க்கின்றன..!(ராஜ் என்றால் இந்தியில் அரசு)
இது ஏதோ தவறுதலாக நடக்கும் நிகழ்வல்ல..ஒரு தேசிய இனத்தின் மீதான திட்டமிட்ட உளவியல் தாக்குதல்..
மாநிலம் என்ற சொல் பயன்பாட்டை தவிர்ப்போம்…இனி தமிழ்நாடு அரசு என்றே சொல்வோம்..!
நன்றி ஆரல்கதிர் முருகன்