தேசமும் நாடும் ஒன்றல்ல. உலகில் 2000க்கும் மேற்பட்ட தேசங்கள் உண்டு,ஆனால் 200 வரையிலான நாடுகளே உள்ளன. தேசத்தையும் நாட்டையும் வேறுபடுத்தும் முக்கியமான அம்சமாக அரசு (State) என்பது உள்ளது.
A nation is a stable community of humans formed on the basis of a common language, territory, history, ethnicity, or psychological make-up manifested in a common culture
ஓவ்வொரு நாட்டுக்கும் அரசு இருக்கும். ஆனால் ஒவ்வாரு தேசத்துக்கும் அரசு இருப்பதில்லை. உலகில் சில தேசங்கள் தமக்கென்று தனித்தவொரு அரசைக் கொண்டுள்ளன (Eg: Germany, France). பல தேசங்கள் ஒரு நாட்டுக்குள்ளே, ஒரு அரசுக்குள் வாழ்கின்றன (Eg: Kurds). சில நாடுகளில் இவ் அரசு ஒரு சமஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
தமிழ் மக்கள் ஒரு அரசற்ற தேசமாக இலங்கை என்ற நாட்டுக்குள், ஒற்றையாட்சி முறைமைக்குட்பட்ட அரசுக்குள் வாழ்கின்றனர். ஆனால் இலங்கைத்தீவில் தமிழ் மக்களை ஒரு தேசமாக இலங்கை அரசு அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களை ஏன் ஒரு தேசமாக முன் நிறுத்த வேண்டும் ?
இலங்கையின் இறைமை சிங்கள பௌத்த அரசாகிய தங்களிடமே இருப்பதாக என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக சொல்லுகிறது
இந்த அணுகுமுறையை ஏற்றுக் கொண்டு செய்யப்படும் எந்தவொரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடும் இத்தீவின் மீதான சிங்கள பௌத்தத்தின் ஏகபோக உரிமையை ஏற்றுக் கொள்வதற்கு நிகரானது. அப்படி நாம் ஏற்றுக் கொண்டால் இலங்கை அரசாங்கம் அந்த அதிகாரப் பகிர்வை எதிர்காலத்தில் ஒரு தலைபட்சமாக நீக்க முடியும்
தமிழர்களை தேசம் என நாம் முன்னிறுத்தும் போது, அவர்களை ஓர் சுயநிர்ணய உரிமையின் படி வந்த இறைமையின் உடைமையாளர்களாக நாம் முன் நிறுத்த படுவோம்
அந்த அடிப்படையில் ஒரு தீர்வு எட்டப்படும் போது, இலங்கை அரசு அதை ஒரு தலைப்பட்சமாக இல்லாமல் செய்ய முடியாது. ஆதலால்தான், தமிழர்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையில்
அரசியல் தீர்வை அணுக வேண்டும்.
உதாரணமாக, அதிகாரப் பகிர்வு வழியிலாக நாம் சமஸ்டி தீர்வை பெற்றுக் கொண்டாலும், அதுவோர் அதிகாரப் பகிர்வு செயன்முறையாக இருப்பதால், இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் புதியவோர் ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அவ்வேற்பாட்டை தன்னிச்சையாக இல்லாதொழிக்க முடியும்.
மாறாக இறைமையுள்ள தேசங்கள் என்ற வகையில் சிங்கள, தமிழ் தேசங்கள் இணைந்து உருவாக்கும் இறைமையான தேசங்களின் சமஸ்டி என்பது தனித்து ஒரு தேசத்தால் தன்னிச்சையாக இல்லாமல் செய்யப்பட முடியாதது. அத்தகைய தீர்வே நீடித்து நிலைக்கக் கூடியதாகும்”.
ஆகவே தேர்தல் அரசியலுக்கு அப்பால் நாங்கள் எங்களை தேசமாக முன் நிறுத்த வேண்டியது மிக அவசியமானது
Via இனமொன்றின் குரல்