மண்டைதீவில் தனியார் காணிகளை கையகப்படுத்த முயன்ற கடற்படை – முறியடித்த முன்னணியினர்!

133

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியினை கடற்படையினருக்காக அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் மேற்கொண்ட முயற்சிக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தால் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

கடற்கரையோரம் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள பகுதியில் மேலதிகமாக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று காலை நடைபெற்றது.

நான்கு பேருக்கு சொந்தமான 16 பரப்புக் காணியினை அளவீடு செய்வதற்ககாச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினர் அளவீட்டு நடவடிக்கையில் ஈடுபட முற்பட்டபோது அங்கு சென்றிருந்த காணி உரிமையாளர்கள் தங்களுடைய உறுதிகளைக் காண்பித்து காணிகளை தர முடியாது என்று வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றனர்.

மக்களிடம் இது தொடர்பில் கடிதம் எழுதிப் பெற்றுக்கொண்ட நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.

இதன் போது பிரதேச மக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஸ் மற்றும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.