சிறிதரனை நரிதரன் ஆக்கிய சுகாஷ்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் , தேசத்தின் குரல் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் என்ற அந்தப் பெரும் புலியோடு, சுமந்திரன் என்ற இந்தச் சின்ன எலியை ஒப்பிட்டு, கிளிநொச்சியிலுள்ள நரி சிறிதரன் பேசுகிறார். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துகின்றனர். ஆயுதப் போராட்டம் தவறு என்றும், ஆயுதம் ஏந்தியது பிழை என்றும் எங்கள் மாவீரர்களைக் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை (29.07.2020)அன்று மானிப்பாய் இளவாலை பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

கடந்த வாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் , தேசத்தின் குரல் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் என்ற அந்தப் பெரும் புலியோடு, சுமந்திரன் என்ற இந்தச் சின்ன எலியோடு ஒப்பிட்டு, கிளிநொச்சியிலுள்ள நரி சிறிதரன் பேசுகிறார்.

இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் கொச்சைப்படுத்துகின்றனர். ஆயுதப் போராட்டம் தவறு என்றும், ஆயுதம் ஏந்தியது பிழை என்றும் எங்கள் மாவீரர்களைக் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் தலைவன் ஆயுதம் ஏந்தியிருக்காவிட்டாம் தமிழினம் 40 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருக்கும்.

இன்று அனைவருக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழை என்றும், இது தலைவர் பிரபாகரன் அமைத்த கூட்டமைப்பு அல்ல. இது ரணிலின் கைக்கூலியமைப்பு . இன்று கோட்டாபாயவுடன்டீல் பேசுகின்றார்கள் . கோட்டாபயவின் கூட்டமைப்பாக மாறப்போகின்றது.

எங்கள் மண்ணுக்கு பல சிங்களக் கட்சிகளின் தமிழ் அரசியல் வேட்பாளர்கள் என்ற கொரோனாக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்குகின்ற ஒவ்வொரு வாக்குகளும் தமிழினத்தை , விலை பேசி விக்கின்ற புள்ளடிகளாகும்.

சிங்களப் பிரதேசங்களில் ஒரு தமிழ்க் கட்சியில் போட்டியிடுகின்ற சிங்களவர் வெற்றிபெற முடியுமா? ஆனால், தமிழர் பிரதேசத்தில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று சொல்லுகின்ற நமது மண்ணில் சிங்களக் கட்சிகளில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெறுகின்றார்கள். இது யார் செய்த தவறு. எனவே, இம்முறை சிந்தித்து வாக்களிக்கவேண்டும். ” என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் தமிழ் தேசியத்தின் விடுதலைக்கானதும் என்றும் தெரிவித்துள்ளார்.