எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள 05 தமிழ் கட்சிகளும்முன்வரவில்லை – சுகாஷ்!

207

2009ஆம் ஆண்டு வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியாக இருந்த எங்களுடைய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் பாதை மாறி அது என்ன நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை எல்லாம் கைவிட்டு அரசாங்கங்களை பாதுகாக்கும் அமைப்பாக மாற தொடங்கியதன் பிற்பாடு அவர்களை திருத்துவதற்காக பலமுறை போராடிப் போராடிப் பார்த்தோம் முடியவில்லை ஒரு கட்டத்தில் எங்களுக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன ஒன்று பிழையான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெற்றி பெருவதா? அல்லது மக்களுக்காக அந்த பிழையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிவழி கொள்கையின்பால் செல்வதா? இதில் நாங்கள் இரண்டாவது வழியை தெரிவு செய்தோம் 2010 முதல் தமிழ் மக்களுக்காக ஒரு நேர்மையான விசுவாசமான அரசியலை செய்து வருகின்றோம்.

இன்று மக்கள் அனைவருக்கும் விளங்கிவிட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறான வழியில் செல்கிறது. இவர்களுக்கு இனியும் அங்கீகாரம் கொடுக்க முடியாது என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். இந்த இடத்திலே மக்களுக்கு இருக்கின்ற கேள்வி என்னவென்றால். அவர்களுக்கு முன்னால் பல்வேறுபட்ட கட்சிகள் பல்வேறுபட்ட சுயேட்சைக் குழுக்கள் மக்களுக்கு முன்னால் வந்து தேர்தல் கடைகளை விரித்து இருக்கிறார்கள்.

தேர்தலை இலக்கு வைத்து பலர் தங்களை மாற்று அணி என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாய வலைக்குள் சிக்க பட்டுவிடக்கூடாது. முதலில் எங்களுடைய மக்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். எங்களுடைய மண்ணில் இருந்து ஒரு வாக்கு கூட சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளுக்கு வழங்கப்படக்கூடாது இவர்கள் எங்களுடைய மண்ணை சிங்கள பௌத்த மயமாக்க வந்திருப்பவர்கள் எங்களுடைய மண்ணிலிருந்து சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளுக்கு ஒரு வாக்கேனும் விழக்கூடாது என்ற முடிவுக்கு வரவேண்டும்.

இரண்டாவது சுயேட்சைக் குழுக்களை மக்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்க வேண்டும். இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தவறான அமைப்பு என்று. அப்படியென்றால் யாருக்கு வாக்களிப்பது? மக்களின் முன்னால் இரண்டே இரண்டு தெரிவுகள் இருக்கின்றன.

ஒன்று மாற்று அணிகளாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டு இருக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழ் தேசிய மக்கள் முன்னணி. மற்றையது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி.
இன்னொரு பக்கம் பௌத்த பேரினவாத சிங்கள கட்சிகள் .
சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளை தமிழ் மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

அதே நேரம் போலித் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கின்ற முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயாவினுடைய கட்சியையும் தமிழ் மக்கள் புறக்கணித்தே ஆக வேண்டும். ஏன் எனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் அனுசரணையுடன். அவர்களுடைய அனுசரணையில் ஜனாதிபதி வேட்பாளர் களிடமும் அவர்களுக்குப் பின்னால் அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிருக்கின்ற சர்வதேச வல்லாதிக்க நாடுகளிடம் என்னென்ன கோரிக்கைகளை தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டும் என்று ஒரு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையிலே, தமிழரசுக்கட்சி எங்களுடைய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், விக்னேஸ்வரன் ஐயாவுடைய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியிகட்சி, ரெலோ, பிளாட், ஈபிஆர்எல்எப், என 6 கட்சிகள் பங்கு பற்றி இருந்தோம்.

அந்தப் பேச்சுவார்த்தையில் எங்களுடைய தமிழ் மக்கள் நலன்சார்ந்து எங்களுடைய கட்சி ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைத்தது. அதாவது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்ற ஒற்றையாட்சி இடைக்கால வரைவு நிராகரிக்கப்பட்ட வேண்டும். ஏனென்றால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற ஒற்றையாட்சி இடைக்கால வரை முற்றிலும் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் வருகின்றது இது தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிரானது. இதில் ஒரே ஒரு அதிகார மையம் மாத்திரம்தாமே ஒற்றையாட்சி இருக்கும்.
அது சிங்கள-பௌத்த அதிகார மையமாகவே அது இருக்கும். தமிழர்கள் உரிமை அற்ற ஒரு அடிமை இனமாகவே வாழ வேண்டியிருக்கும்.

இரண்டாவதாக இடைக்கால வரைவில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் அதனால் ஏற்படப்போகும் அபாயங்கள் எங்களுடைய மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்லூர் ஆலயத்திற்கு பக்கத்திலேயே ஒரு பக்கத்தில் விகாரையை கட்டிவிட்டு. பௌத்த மதத்திற்கும் நல்லூர் ஆலயத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையின் பிரகாரம் விகாரைக்கு சார்பாக நீதிமன்றங்கள் தீர்ப்பை எழுதுவார்கள்.

இன்று பௌத்த தேரர்கள் சொல்லுகின்றார்கள் நல்லூர் ஆலயம் சிங்கள பௌத்தர்களுக்கு உறியதாம் அதைக் கட்டியவர் சபுமல் குமாரன் என்று.

திருகோணமலையில் இருக்கின்ற திருக்கோணேஸ்வரம் கோயில் கோகண்ன விகாரையே என உரிமை கோருகின்கிறனர்.

இதற்கு எதிராகத்தான் இப்படியெல்லாம் நடக்கும் என்று தான் நாங்கள் ஒற்றையாட்சி இடைக்கால வரைவை நிராகரிக்க வேண்டும் என்று கூறினோம். ஏனென்றால் அது ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் வருகின்றது அது பௌத்த, பௌத்த சாசனத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்பதற்கு ஏனைய ஐந்து கட்சிகளும் முன்வரவில்லை ஆனால் 05 கட்சிகளும் இடைக்கால வரைவை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆகவே இன்று தமிழ் மக்களின் அபிலாசைகளை சமஸ்டி தீர்வு எல்லா மதங்களுக்கும் சமத்துவம் வழங்கப்படவேண்டும் என்ற கோட்பாடுகளை வலியுறுத்துகின்ற ஒரே ஒரு கட்சி தமிழ் மக்கள் முன்னணியாக மாத்திரமே இருக்கின்றது .

ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்ட, கேட்கின்ற ஒரு தரப்பாக முன்னணி மாத்திரமே உள்ளது. அது மாத்திரமல்லாது அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு விவரம்,போன்ற அவர்களுடைய பிரச்சினைகளுக்கும் போராடுகின்ற ஒரு அமைப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம்தான் இருக்கின்றது.

எங்களிடம் அரசியல் பொருளாதார சமூக நலம் சார்ந்த திட்டங்கள் காணப்படுகின்றன. எங்களுடைய அரசியல் இலக்கு என்னவென்றால் ஒரு நாடு இரு தேசம் என்ற அடிப்படையில், ஒரு சமஸ்டி தீர்வினை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுப்பது எமது இலக்காகும். சமஸ்டியை கோருவது ஒரு குற்றமாகாது, இது சர்வதேசதினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். முதல் முதலில் சமஸ்டி ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள் அல்ல.

இந்த மண்ணில் முதன்முதலில் பண்டாரநாயக்கா 1975ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது மிகத்தெளிவாக சொல்லியிருந்தார். இலங்கைக்கு பொருத்தமான ஆட்சி சமஸ்டி என்று. சமஸ்டி என்பது நாட்டை பிரிப்பது என்பதை பொருள்படாது ஒரு நாடு இரு தேசம் என்பது நாட்டைப் பிரிப்பதல்ல. ஒரு நாட்டுக்குள்ளே தமிழர் ஒரு தேசம் சிங்களவர் ஒரு தேசம் என எங்களையே நாங்கள் ஆளுகின்ற தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம். சிங்களவர்கள் அவருடைய தலைவிதியை சிங்களவரே தீர்மானிப்பார்கள்.
இரண்டு தேசங்களும் இணைந்த ஒரு நாடாக இலங்கை இருக்கும்.

“ஈழம் எங்கள் நாடடா இன்பமான நாடடா” என்று வாழ்வதற்கேற்ற, ஒரு ஆட்சிதான் “ஒரு நாடு இரு தேசம்” கனடாவில் இருக்கின்றது போல “ஒரு நாடு இரு தேசம்” இது எங்களுடைய அரசியல் இலக்கு.

அடுத்தது பொருளாதார இலக்கு, தற்சார்பு பொருளாதாரம் தமிழர்கள் தங்களுடைய சொந்த காலிலே நிற்கின்ற பொருளாதார கட்டமைப்பு உருவாக்குவது. எங்களுடைய இலக்கு, எங்களுடைய பொருளாதார கட்டமைப்பு. இரண்டு பிரதான விடயங்களை வலியுறுத்தி நிற்கின்றது.

ஒன்று விவசாயம் மற்றொன்று கடல்வளம் விவசாயத்தில் எங்களுடைய மக்களை தன்னிறைவு காண செய்து எங்களுடைய மக்களுடைய தேவைகளை அவர்களே பூர்த்தி செய்கின்ற நிலைப்பாடு. அவர்களுடைய தேவைகள் பூர்த்தி செய்த பின்னர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எங்களுடைய பொருளாதார திட்டமாகும்.

அடுத்தது கடல்வளம் தமிழர்களுடைய பலமே கடல்வளம் தான். வடக்கு, கிழக்கை சுற்றி கடல் இருக்கின்றது. இலங்கையின் மொத்த கடற்பரப்பில் 3/2 கடற்பரப்பு வடக்கு கிழக்கிலேயே உள்ளது. ஆனால் கவலையான விடயம் வடக்குகிழக்கை சுற்றி கடல் இருக்கின்றது, கடல் நிறைய மீன் இருக்கின்றது. ஆனால் சீனாவிலிருந்து ரின்மீனை இறக்குமதி செய்கின்றோம் வடக்குகிழக்கில் ஒரு ரின்மீன் தொழிற்சாலை கிடையாது, தும்பு தொழிற்சாலை கிடையாது, பனை மரம் இருக்குது, பனைமரம் நிறைய பனம்பழம் இருக்கிறது. ஆனால் ஒரு ஜாம் தொழிற்சாலை கிடையாது.

நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் புலம்பெயர் தமிழர்களின் நிதி உதவியுடன் முதல் கட்டமாக தொழிற்சாலைகளை உருவாக்குவோம். சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகள் ஏமாற்றுவது போல் நாங்கள் ஏமாற்றாமல், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை எங்களுடைய மக்களுக்கு உருவாக்குவோம். எங்களிடம் பண்பாட்டு நூல்கள் உள்ளன. எங்களுடைய தமிழ் மொழியைப் பாதுகாக்கவேண்டும், எங்களுடைய பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும், எங்களுடைய கலாச்சாரங்களை பாதுகாக்க வேண்டும், போதைப்பொருளை கட்டுப்படுத்தவேண்டும், வாள் வெட்டு கலாச்சாரத்தை கட்டுப் படுத்தி, எங்களுடைய மக்கள் நிம்மதியாகவும் சுபிட்சமாக வாழ வைப்பதற்கு எங்களுடைய கட்சி முன் நினைக்கும் போது இதுக்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

எனவே அன்பான தமிழ் மக்களே உங்களிடம் நாங்கள் கேட்பது சிங்கள பௌத்த இனவாத கட்சிகளை நிராகரித்து, போலி தேசியம் பேசுகின்ற கட்சிகளை நிராகரித்து, எங்களுடைய இலட்சியத்தை தொடர்வதற்கு நீங்கள் எங்களுக்கு வாக்களித்து பயணத்தை தொடர வைப்பீர்கள் என உங்களை தயவு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது பரப்புரை அரங்கிலே தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.