எனது அரசியல் பயணமானது புத்தெழுச்சியுடன் தொடரும் – சுகாஷ்!

321

இலங்கை பாராளுமன்ற தேர்தலில்
முதல் தடவையாக மக்களை மட்டும் நம்பி தேர்தல் அரசியலில் பிரவேசித்த எனக்கு, நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக இத் தேர்தலில் 21,463 விருப்பு வாக்குகளை எனக் அளித்து மேலும் எமது கட்சிக்கு 2 ஆசனங்களையும் வழங்கி ஆதரவு தந்த உங்களுக்கு எனது சிரந் தாழ்த்திய நன்றிகள்.

நான் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டாலும் நீங்கள் எனக்களித்த வாக்குகளுக்கு பொறுப்புக் கூறுபவனாகவும் இனத்திற்காக குரல் கொடுப்பவனாகவும் இருப்பேன் என்ற உத்தரவாதத்தை வழங்கி நிற்கின்றேன்.

மேலும் எனக்கு அங்கீகாரம் தந்த உங்களுக்காக எனது பயணம் இன்னும் முழு வீச்சாகவும், மூச்சாகவும் தொடரும் என முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுபாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.