“முடிந்தால் கைது செய்து பாருங்கள்” பகிரங்க சவாலை விடுத்தார் சுகாஷ்!

715

முன்னணியின் வேட்பாளர்கள் ஆகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சுபாஷ் கனகரத்தினம் ஆகியோரை வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமது கட்சி இவர்களை கைது செய்யும் என அங்கஜன் ராமநாதன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலடியாக முடிந்தால் கைது செய்து பாருங்களேன் என முன்னணியின் வேட்பாளர் சுகாஷ் கனகரட்ணம் அவர்கள் சவால் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (02.08.2020) பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் வேட்பாளரும் சட்டத்தரணியும் ஆகிய கனகரட்ணம் சுகாஸ் அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்..

யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள் தற்பொழுது ஒரு கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் யாழ் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நான்கு ஆசனங்களை கைப்பற்றுவார்கள் என தெரிவித்துள்ளார்கள். எனவே எமது வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர்.

“ஆழக்கடல் எங்கும் சோழ மகாராஜன் ஆட்சி செய்தானே அன்று” வடக்கு கிழக்கு முழுவதும் முன்னணியினர் ஆட்சி செய்வார்களே இன்று என தெரிவித்துள்ளார்.

மேலும் சுதந்திர கட்சியின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதன் கேவில் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சுகாஷ் கனகரட்ணம் ஆகியோரை வரும் தேர்தலின் பின்னர் தமது கட்சி அவர்களை கைது செய்யும் என கூறியிருந்த கருத்துக்கு முன்னணியின் வேட்பாளர் சுகாஷ் அவர்கள் பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

அங்கஜன் இராமநாதனுக்கு பகிரங்க சவால் ஒன்றை நான் விடுகின்றேன் முடிந்தால் துணிவிருந்தால் எங்களை கைது செய்து பாருங்கள். நாங்கள் அஞ்சுவதற்கு உங்களின் ஊத்தை சர்வா இல்லை தன்மானத் தமிழன் குமார் பொன்னம்பலம் பெற்றெடுத்த குட்டி பொன்னம்பலம் தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிங்களப் பேரினவாதத்திற்கு அஞ்சாது பொங்கு தமிழை எழுச்சி நாயகனாக தலைநிமிர்ந்து நின்றவன் தான் இந்த செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் இந்த சிங்கள மாப்பிள்ளையின் சலசலப்புக்கு அஞ்சி இருந்தால் அன்றே இந்த நாட்டை விட்டுச் சென்றிருப்பார் கஜேந்திரகுமார் அவர்கள்.

இந்த சலசலப்புகளுக்கு அஞ்சுபவர்கள் முன்னணியினரில்லை வீரத் தமிழர்களடா நாங்கள் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனவே நீங்கள் முடிந்தால் எங்களை கைது செய்து பாருங்கள் என பல்லாயிரக்கணக்கான மக்களின் கரவோசங்களுக்கு மத்தியில் இந்த பகிரங்க சவாலை விடுத்திருந்தார்.