கொழுக்கட்டை பிடிப்பது எப்படி? – சம்பந்தர் ஐயா

135

தமிழ் மக்களே!

கொளுக்கட்டை பிடிப்பது எப்படி என்ற கருமத்தை இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன். கவனமாக கேளுங்கள்.

என்ன நெடுக சொல்வதுதூனே என்று நீங்க நினைக்கக்கூடும். என்ன செய்வது? எத்தனை தடவை சொன்னாலும் சிலருக்கு புரிய மாட்டேங்குது.

அரிசி மாவை எடுத்து நன்றாக பிசைந்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். அதுதான் கொளுக்கட்டை

மகிந்தவுக்கு இது கொளுக்கட்டை என்று கூறுவேன். இதையே ரணில் சேர் கேட்டால் மோதகம் என்பேன்.

இதனை கூட இருந்து பார்க்கும் என் தம்பி சுமந்திரன் “இதுவல்லோ சாணக்கியம்” என்பார். கடவுள் தந்த வரம் என்று என்னை புகழ்வார்.

கனடாவில் இருக்கும் நம்மவர் இன்னும் ஒருபடி மேலே சென்று எனக்கு “வாழும் வீரர்” என்று பட்டம் தருவார்.

சரி. மக்களே இனி அடுத்த தீபாவளிக்கு கொளுக்கட்டை பிடிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

இப்படிக்கு உங்கள்

சம்பந்தர் ஐயா.

செய்தி – தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாங்களே. அதை இம்முறையும் மக்கள் நிரூபிக்க வேண்டும் – சம்பந்தர் வேண்டுகோள்.

குறிப்பு – இதுவரை ஏக பிரதிநிதியாக இருந்து என்ன ம – ரை பிடுங்கினீர்கள் என்று இதைப் படிக்கும் உங்களுக்கு கேட்க தோன்றும். அப்படி கேட்பது நாகரீகம் இல்லை. எனவே என்ன ஆணியைப் பிடுங்கினீர்கள் என்று கேட்போம்.

நன்றி – தோழர் பாலன்