எத்தனைகாலம் தான்..ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

54

சத்தியமா என்னாலை முடியல்லங்கோ… கனடிய வானொலியில் வியாழன் ஒலிபரப்பான செவ்வி ஒன்றை கேட்டுக்கொண்டிருந்தேன்.. தாயக கட்சிப் பேச்சாளர் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.. நான் பிரதருடன் பேசியிருக்கிறேன்… சனாதிபதியுடனும் பேசியிருக்கிறேன்… ஆம் புதிய அரசியல் யாப்பைப் பற்றித்தான்… தேர்தல் முடிந்ததும் மிச்சத்தை பேசி முடிச்சிடலாம் எண்ட அளவுக்கு நம்மாள் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்…

இந்த ஆறு மாதத்திலேயே இப்ப இருக்கிற அரசியல் யாப்பே கிழித்து தொங்கிவிட்ப்படிருக்கு எண்டு எல்லோருமே கத்துனம்… இருக்கிறதே நடுரோட்டிலை அம்மணமா நிக்குது… இந்த லட்சனத்துலை என்ன தினாவெட்டுலை புதிசைப் பற்றிக்கதைக்கினமோ… ஓ கேக்கிறது கேனப்பயலுகளென்டபடியால் எருமை மாடும் ஏறப்பிளேன் ஓட்டுது போல!!!

அதைவிடப் பாருங்கோ நாங்கள் சிங்களத்துலை பேசினால் சிங்கள மக்கள் புரிஞ்சு எல்லாத்தையும் ஏத்துக் கொண்டுவிடுவினமாம்… இப்பவே தங்களை கேட்டுக் கேட்டு நிறைய மாறிட்டினமாம் வேற!! இந்தப் பிரேமதாசா பயலுக்கு இதை யாரும் சொல்லலைப் போல.. தான் பேசித் தோத்ததுக்குப் பதிலா நம்மாளை சிங்களத்திலை பேச விட்டிருந்தால் வெண்டிருக்கலாம் எல்லோ???

ரம் ஜயா மாதிரி பட்டென்டு பேசி சட்டென்டு முடிக்கிற வேலை எல்லாம் சும்மா 11 வருசமா சேடம் இழுபடுது போங்க!!! சிங்கள மக்கள் இன்னும் புலிகளிண்டை ஈழத்தைத் தான் பிடிச்சுக் கொண்டிருக்கிறம் எண்டு நம்பினமாம்… இல்லை எண்டு காட்டுறதுக்குத் தானாம் தான் அப்பிடிஇப்படி கதைக்கிறதாம்.. அது சரி அப்ப வட்டுக்கோட்டையிலை ஈழம் தான் தீர்வு எண்டு சிங்களத்துக்கு மட்டுமில்லை உலகத்துக்கே முரசரைச்சு சொன்னது யாருங்கோ?? புலிகள் தலைவர் செல்வநாயகமோ???

83க்கு பிறகு ஒற்றையாட்க்கு விசுவாசமா சத்தியப்பிரமாணம் செய்யமாட்டம் என சென்னையிலை வந்து குந்தியிருந்தது யாருங்கோ???? சம்மந்தர் ஜயாவை ஒருக்கால் கேட்டுச் சொல்லுவிங்களோ!!! இப்படிக் கேட்டால் நான் அப்ப கட்சியிலை இருக்கல்லை எண்டு மட்டும் சொல்லிப்போடாதைங்கோ!!!! எங்களுக்கு அப்பஅப்ப இதனாலை காட்டுலை அட்டாக்கே வந்திடுது… எத்தனை காலம் தான்… எத்தனை காலம் தான்… எத்தனை காலம் தான்… கோவிச்சுப் போடாதைங்கோ… ஒரே றக்கோட்டு போட்டுப் போட்டு அழிஞ்சு போட்டுதுங்கோ…

நன்றி – Nehru Gunaratnam