இதுவரை இவர்கள் பிடுங்கிய ஆணி என்ன?

56

தங்களை ஏகபிரதிநிதிகளாக தெரிவு செய்யுங்கள் என்று இவர்கள் கேட்கிறார்கள்.

இதுவரை ஏகபிரதிநிதிகளாக இருந்து என்னத்தை பிடுங்கினார்கள்? இனியும் ஏகபிரநிதியாகி இவர்கள் என்னத்தை பிடுங்கிவிட முடியும் என்று கேட்கிறார்கள்?

அண்மையில் அமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட கறுப்பு இனத்தவர் கள்ள நோட்டு குற்றச்சாட்டிலே கைது செய்யப்பட்டார்.

அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை. கைது செய்யும்போது கழுத்து நெரித்து கொல்லப்படுகிறார்.

ஆனாலும் கறுப்பு இனத்தவர்கள் மட்டுமல்ல முழு உலகமே அதை நிற ஒடுக்குமுறை என கண்டிக்கிறது. அதற்கு எதிராக போராட்டம் நடக்கிறது.

ஆனால் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்பும் அது இனப்படுகொலை என்று கூற முடியாதாம். ஏனெனில் ஜ.நா ஏற்றுக்கொள்ளாதாம்.

கறுப்பு இனத்தவர் கொல்லப்பட்டதை ஜ.நா நிற ஒடுக்குமுறை என்று ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்று யாரும் அக்கறை கொள்ளவில்லை.

மாறாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா உட்பட அனைவரும் நிற ஒடுக்குமறை என்றே இதனை கண்டிக்கிறார்கள்.

ஆனால் எங்கட தலைவர் சுமந்திரனுக்கு மட்டும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று கூற முடியாதாம். ஏனெனில் ஜ.நா ஏற்றுக் கொள்ளாதாம்.

அதுமட்டுமல்ல சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் புலிகளும் இனச் சுத்திகரிப்பு செய்தவர்கள், புலிகளின் படுகொலைகளும் விசாரிக்க வேண்டும் என்றுதானே இவர்கள் கூறினார்கள்.

அதுமட்டுமல்ல, இனப்படுகொலை செய்தவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழ தனக்கு கிடைத்தது பாக்கியம் என்று கூறியவர் அல்லவா இந்த சுமந்திரன்.

அப்படிப்பட்டவர் கொழும்பில் போட்டியிட்டு பதவி பெறவேண்டியதுதானே? எதற்கு யாழ் மாவட்டத்தில் வந்து போட்டியிட வேண்டும்?

தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதற்கு தமிழ் மக்களிடமே வந்து பதவி கேட்கும் இவர்கள் தமிழ் மக்களை முட்டள்களாக நினைக்கவில்லை. மாறாக மூளையே இல்லாதவர்களாக நினைக்கிறார்கள்.

தமிழ் மக்கள் தங்களுக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பதை இந்த தேர்தலில் இவர்களுக்கு நிச்சயம் காட்ட வேண்டும்.

குறிப்பு – ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைதானே கொன்றனர். மீதி இரண்டு லட்சம் மக்கள் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனரே. எனவே எப்படி இனப்படுகொலை என கூறமுடியும் என சுமந்திரன் கேட்கிறார். அப்படியென்றால் அமெரிக்காவில் ஒரு கறுப்பு இனத்தவர்தானே கொல்லப்பட்டிருக்கிறார். அனைத்து கறுப்பு இனத்தவரும் கொல்லப்படவில்லையே. அங்கு மட்டும் எப்படி அதை நிறப்படுகொலை என கூறமுடிகிறது?

நன்றி தோழர் பாலன்