சுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…

58

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...

View Results

Loading ... Loading ...

5 கோடி ரூபா கூட சேரவில்லை. அப்புறம் எப்படி 20 கோடி ரூபா அனுப்பியிருக்க முடியும் என கனடா கிளைத் தலைவர் தங்கவேல் கேட்டிருக்கிறார்.

நல்ல கேள்வி. ஆனால் சுமந்திரனை காப்பாற்றுவதாக நினைத்து அவர் கூறியது சுமந்திரனுக்கு இன்னும் சிக்கல் வழங்குவதாகவே இருக்கிறது.

ஏனெனில் சுமந்திரன் தான் ஒரு சதம்கூட பெறவில்லை என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் 5 கோடி ரூபா கொடுத்திருப்பதாக கூறுவது அவருக்கு உதவுவதாக இல்லை.

சரி பரவாயில்லை, 5 கோடி ரூபா வாங்கிவிட்டு எப்படி ஒரு சதம்கூட வாங்கவில்லை என்று உங்களால் பொய் கூறமுடிகிறது என்று சுமந்திரனிடம் நாம் கேட்கப் போவதில்லை.

ஏனெனில் அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்த பின்னும் ஏன் பொய் கூறினீர்கள் என்று கேட்பது முட்டாள்தனம். ஏனெனில் அதற்கும் அவர் பொய்தான் கூறுவார்.

அதேவேளை தங்கவேல் அவர்கள் கூறுவதையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் தனது கிளைக் கணக்கு வழக்குகளை இதுவரை பொது வெளியில் தந்தது இல்லை.

அடிக்கடி இந்தியா சென்று வரும் இவர் தனது அந்தகால விருப்பமான நடிகைக்கு அன்பளிப்புகளை வழங்கி வருவதாகவும் அதற்கெல்லாம் இவருக்கு பணம் ஏது என்று சிலர் கேட்கின்றனர்.

ஆனால் இது அவரது தனிப்பட்ட விடயம் மட்டுமல்ல ஆதாரமற்ற அவதூறும் ஆகும். எனவே நாம் இதில் அக்கறை காட்ட வேண்டியதில்லை.

ஆனால் அவர் உண்மையில் சுமந்திரனை மட்டுமல்ல தன்னையும் காப்பாற்ற விரும்பினால் இதுவரை கனடா கிளை சேர்த்த பணம் எவ்வளவு, கட்சிக்கு கொடுக்கப்பட்டது எவ்வளவு என்ற கணக்கு விபரங்களை இனியாவது மக்கள் முன் வைக்க வேண்டும்.

இப்படி அவர் மக்கள் முன் கணக்கு வழக்குகளை வைத்தால் அது லண்டன் கிளைக்கும் ஒரு முன் மாதிரியாகவும் அவர்களும் கணக்கு காட்ட வேண்டிய நிலையை உருவாக்கும்.

தோழர் பாலன்