துரோகத்தின் உச்சகட்டத்தில் சுமந்திரன் கும்பல்,கரணம் தப்பினால் மரணம்…

1073
தமிழ் தேசிய அரசியலில் மிக மோசமான அத்தியாயத்தை தற்போது எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.பெண் பிரதிநிதித்துவத்தை மதிக்கிறேன் என்றெல்லாம் மேடஐகளில் பேசுபவர்,திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது அல்லக்கைகள் மூலம் அழுத்தம் கொடுத்துவருகிறார்..
வேட்பு மனு தாக்கல் செய்யிம் போதே , கட்சித்தலைமைக்கு பிரச்சினை வந்தால், பாவிப்பதற்கென ஒரு ராஜினாமா கடிதம் வாங்கி வைக்கப்பட்டிருந்தது ( ஜே ஆர்/ மகிந்த பாணி அராஜகம்).அந்த கடிதத்தை கொண்டு போய் சயந்தன் தேர்தல் ஆணையாளரிடம் கொடுத்து திருமதி சசிகலா ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.
ஆனால் திருமதி சசிகலா , தேர்தல் ஆணையாளரிடம் அந்த கடிதத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என மறுதலித்து இருக்கிறார்.இப்போது சசிகலாவை சூழ்ந்து நின்று சுமந்திரன் தரப்பு கடும் அழுத்தம் கொடுக்கின்றன.
ஏனைய கட்சி பிரமுகர்கள் இந்த பெண் அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.பதவிக்கு அலைகிற கேவலமான எச்சைத்தனமான ஒரு நபர் என்பதை சுமந்திரன் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்

துரோகம் !!!

மக்கள் தமது விருப்பை, வாக்குகளாக ஆணை வழங்கிய பின்னர், அவற்றை அபகரித்து, இன்னொருவர் முடிசூட முனைவது, மாபெரும் துரோகம் !

என்னதான், ஜனநாயகம் என்றும் அகிம்சைவாதியென்றும், வேடம் போட்டாலும், இறுதியில் உங்கள் செயல் சர்வாதிகாரத்திலும், ஆராஜக்கத்திலும் வந்து நிற்கிறது.

அதிலும், கணவனை இழந்த பெண்ணின் சாதனையை தட்டிப்பறிக்க முனையும், கோழைத்தனத்தைவிட வேறு கேவலம் கிடையாது.

இதனைத்தான் உங்களவர்கள் “சாணக்கியன்” என்று பெருமைப்படுகிறார்கள்.என்ன செய்ய ? நீங்கள் தான் பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பாச்சுதே…

Uthayan