சுமந்திரன் தமிழின துரோகி..? – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா

150
[poll id= “2”]

இன்று யாழ் ஊடக அமையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சுதந்திரம்!ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர், எம்.ஏ.சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும்!

குறிப்பாக மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் எல்லோரும் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும்!” என்று, முன்னாள் மூத்த போராளியும் ஒரு மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனை இவ்வளவு தூரம் “பில்டப்” பண்ண வேண்டிய தேவை இல்லை.அவரை கண்டும் காணாமலும் விடப்பட்டிருந்தாலே இந்நேரம் அவர் அரசிநல் தேடுவார் இன்றி எங்கயோ ஒரு மூலையில் இருந்திருப்பார்.வார்த்தைக்கு வார்த்தை சுமந்திரன் சுமந்திரன் என்றும்,எடுத்தற்கு எல்லாம் சுமந்திரன்தான் பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் கிறுக்கி கஷ்டப்பட்டு அவரை இந்த நிலைக்கு உயர்த்தி கொண்டு வந்திருப்பதே சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் என்று சொல்லப்படுபவர்களே..சுமந்திரன் இவர்களை வாயை வாடகைக்கு எடுத்து பயன்படுத்து மேலே வந்துள்ளார்.சுமந்திரன் ஒழிய வேண்டுமெனில் சுமந்திரனை வைத்து அரசியல் செய்வோர்,எடுத்ததுக்கெல்லாம் சுமந்திரன் சட்டைபையில் கைவிடுபவர்கள் முதலில் ஒழிந்து போக வேண்டும்.அதன் பின்னர் சுமந்திரனை பேசு பொருளாக்க யாரும் இருக்கமாட்டார்கள்.அவர் தன்னால் அழிந்து போவார்.அரசியலில் இருந்து ஓரங்கட்டுப்படுவார்.