தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரன் நீக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு நடந்த கூட்டத்தின் பின்னர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பின் புதிய பேச்சாளாராக நியமிக்கப்பட்டுள்ளதுடன்,பிரதம கொறடா பதவியில் இருந்து சிறிதரன் நீக்கப்பட்டு,அந்த பதவி சித்தார்த்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுமந்திரன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே இந்த முடிவுகளை சம்பந்தர் எடுத்துள்ளதாக உள்வீட்டு நம்பிக்கையான வட்டாரங்கள் எம்மிடம் தெரிவித்தன.தவிர சுமந்திரனுக்கு கட்சியினுள்ளும் வெளியிலும் உள்ள கெட்ட பெயர் காரணமாக சுமந்திரன் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதாகவும்,அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி தவிப்பதாகவும் தெரிகின்றது.அவரின் ஆதரவாளர்களும் அவரை கைவிட்டுள்ளதாக தெரிகின்றது.