கடந்த தேர்தல் முறைகேடு வெற்றிகளின் பின்னர் தமிழ் தேச அரசியலில் தெரிந்தோ தெரியாமலோ பேசு பொருளாக இருந்த சுமந்திரன் காணாமல் போயிருக்கிறார்.கூட்டமைப்பின் பின்னடைவுகளுக்கு முழுகாரணத்தையும் அவர் மேல் சுமத்தப்பட்டு,கட்சியின் உள்ளும் ஒதுக்கப்பட்டுள்ளார்.தவிர இன்றைய மீடியாக்களும் சுமந்திரனை புறகணிக்க தொடங்கிவிட்டன.நாளாந்தம் ஏதோ ஒன்றை சொல்லி வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்த சுமந்திரனுக்கு இது மிகபெரிய மனவருத்தத்தை உண்டு பண்ணியுள்ளது.இதனால் மனமுடைந்த சுமந்திரன் தனது ஆதரவாளர்களிடம் தான் இந்த ஐந்து வருடத்துடன் அரசியல் இருந்து ஒதுங்க போகிறேன் என்று கூறி வருகிறார்.தேர்தலின் போது சசிகலாவுக்கு நடந்த சம்பங்களினால் சுமந்திரனின் பல ஆதரவாளர்கள் விலகியுள்ளமை குறிப்பிடதக்கது.இருக்கிறதே 10,20 தான் அதுவும் விட்டு போனால் என்ன செய்வது என்று தனது ஆதரவாளர்களிடம் முதற்கட்டமாக அனுதாபம் தேடும் முகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறு போவதாக கதைவிட்டு கொண்டு திரிகிறார்.அதனை நம்பி அவரின் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர்.
இனி அடுத்த கட்டம் என்னவென்பது குறித்தும் அவரினால் எதுவும் செய்யமுடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றார்.காரணம்,தமிழ் தேசிய அரசியலை 2009 க்கு பின்னர் குத்தகைக்கு எடுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பை,சுமந்திரன் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து ஏகதிகார போக்கில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் குத்துகரணம் போட ஆரம்பித்த சுமந்திரனுக்கு இன்று தமிழ்தேசிய மக்கள் தலையில் குட்டி ஒரு மூலையில் இருத்தியுள்ளனர்.ஒரு இலட்சம் வாக்குகளை பெறுவேன் என்று தான் ஐந்து வயதில் இருந்து சந்தோசமாக வாழ்ந்தவர்களுக்கு சவால் விட்டுவிட்டு வந்த சுமந்திரனால் ஐந்தில் ஒரு பங்கு கூட வாங்க முடியாமல் போனமை வெட்க கேடு,மான ரோசம் இருந்தால்,இப்பவே அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கலாம்,ஆனார் அவருக்குதான் அது எதுவும் கிடையாதே!
இனி பாராளுமன்றம் சரி சர்வதேச களம் சரி,எல்லாவற்றிலும் மிகுந்த சவால்கள் இருப்பதுடன்,கஜேந்திரகுமார்,விக்கினேஸ்வரன் போன்றவர்களும் இந்த களங்களில் மக்களால் இறக்கிவிடப்பட்டுள்ளதாலும் கொள்கை ரீதியாக சிலவற்றில் கஜா,விக்கி அணியினர் சர்வதேச களங்களில் ஒற்றுமையுடன் சேர்ந்து இயங்க வாய்ப்புகள் உள்ளதால்,சுமந்திரன் முற்றாக ஓரங்கட்டப்படும் வாய்ப்புகள் அதிகம்,கூடவே முன்புபோல் கண்டதையும் அடிச்சுவிட்டு இங்கு வந்து கதையளக்க முடியாத ஒரு நிலை வந்திருக்கின்றது.தெரிந்தோ தெரியாமலோ முன் கதவோ பின்கதவோ , தமிழ் தேசிய பிரதிநிதிகள் என்ற பெயரில் இருப்பதால்,இவர்களுக்கு உயர் அழுத்தங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரயோகித்து இவர்களை வேலை வாங்க வேண்டிய தேவை மக்களுக்கு உண்டு.மக்கள் இவர்களை தினம் தினம் மேய்க்க போவதில்லை,கண்டுக்கவும் போவதில்லை,ஆனால் ஐந்து வருடத்துக்கு பின்னர் அந்த ஒரு நாளில் ஆளை மாற்றிவிடுவார்கள்.எனவே கடந்த காலங்களையும்,மற்றைய அரசியல்வாதிகளுக்கு நடந்ததையும் கணித்து மக்கள் சேவையை முன்னெடுக்கும் போது இத்தகைய துன்பங்களை தவிர்த்து கொள்ளலாம்.வாழ்நாள் முழுக்க STF கூட வர போவதும் இல்லை,கூடவே வெளிநாடுகளுக்கும் நிம்மதியாக போய்வர வேண்டுமே!