சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினரின் கடும் பாதுகாப்பின் மத்தியில் பருத்தித்துறையில் சுமந்திரன் தேர்தல் பிரச்சாரம் செய்வதால் அப்பகுதி மக்களை பாதுகாப்பு தரப்பினர் பலத்த கெடுபிடிகளுக்குள் தள்ளியுள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சுமந்திரன் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற இருந்ததாகவும் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாகவும் அந்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு அமையவும் சுமந்திரனின் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இனபடுகொலை சிறிலங்கா அரசின் இராணுவ பாதுகாப்போடு திரியும் சுமந்திரன்,எப்படி சிறிலங்கா அரசை தாண்டி தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்? சுமந்திரன் மீது சிறிலங்கா அரசு காட்டுஅக்கறையை பார்க்கும் போதே தெரியவில்லையா? அவர் யாருக்கானவர் என்று? இவ்வாறு பெரும்பான்மை தமிழர்களால் வெறுக்கப்படும் ஒருவர்,தனது பின்கதவு திட்டங்கள்,கள்ளகுணங்கள் மூலம்(இதை அவரின் சொம்புகள் சாணக்கியம் என்று கூறுவார்கள்) அப்பாவி மக்களை ஏமாற்றியும்,கிறிஸ்தவ சபைகள் மூலமான ஓட்டுக்களை எடுத்தும்,மற்றும் சில பல திருகுதாளங்களை மேற்கொண்டு தேர்தலில் வென்றதாக காட்டி,தமிழருக்குள்ளே ஒரு பகுதி மேல் பிரிவினையை உருவாக்க பாக்கின்றார்.அல்லது ஒரு சிறுகும்பலை வைத்து ஒரு தேர்தலில் வென்றுவிட்டு,ஒட்டுமொத்த தமிழரிரை பிரதிநிதித்துவபடுத்துவதாக ஏமாற்று நாடகம் போடுகின்றார்.நந்திகடலில் வைத்து தலைவரை விட்டிட்டு வந்திருந்தாலும்,அவரின் வார்த்தைகள்தான் உங்களை இனியும் வழிகாட்டும்.. விழிப்புணர்வுதான் விடுதலைக்கு முதல்படி…
