அற்புதங்கள் நிகழ்த்தும் ஆபிரகாம் சுமந்திரன்!

577

சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான்கூட மூன்றாம்நாள்தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள்.

ஆனால் ஐந்தாம் நிலையில் இருந்த சுமந்திரன் ஒரே இரவில் இரண்டாவது நிலைக்கு வந்து அற்புதம் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

இது எப்படி நிகழ்ந்தது என்று சசிகலா ரவிராஜ் மட்டுமல்ல சுமந்திரனின் ஆதரவாளர்கள்கூட திகைத்து நிற்கிறார்கள்.

இங்கு வேடிக்கை என்னவெனில் “சுமந்திரன் நேர்மையானவர். அவர் மோசடி செய்யவில்லை” என்று அவரின் விசுவாசிகளால்கூட கூற முடியவில்லை.

மாறாக, இலங்கை தேர்தல் திணைக்களம் நேர்மையானது. அதில் மோசடி செய்ய முடியாது என்றே கூற முற்படுகிறார்கள்.

சுமந்திரன்கூட, 75 கள்ள வாக்கு தானே போட்டேன் என்று கூறிய சிறீதரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று சிரிக்காமல் கூறுகிறார்.

சரி. பரவாயில்லை. “30 வோட்டுடன் ஈபிடிபி 7 எம்.பி களைப் பெற்றது” என்று இதுவரை கிண்டலாக கூறிவந்தவர்கள் இப்போது இலஙகை தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று கூற முற்படுகிறார்கள்.

இதுகூடப் பரவாயில்லை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மோசடி செய்து வென்றார் என்று எழுதிய ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார் இலங்கை தேர்தலில் யாரும் மோசடி செய்ய முடியாது என்று. என்னத்தைச் சொல்ல.

எல்லோருக்கும் தலையில் மூளையை வைத்த கடவுள் இவனுகளுக்கு மட்டும் முழங்காலில் மூளையை வைத்து விட்டார் போல் இருக்கிறது. எல்லாத்தையும் தலை கீழாகவே சொல்லுறான்கள்.

சுமந்திரன் அவர்களே!

சசிகலா ரவிராஜ் தேர்தலுக்கு பதிது. அவருக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறை தெரியாது என்கிறீர்கள். சரி. ஏற்றுக்கொள்கிறோம். சித்தார்த்தனும் புதிதா? அவருக்கும் தேர்தல் நடைமுறைகள் தெரியாதா?

உங்கள் பேட்டியில் “நான் தொடர்ந்து இரண்டாம் நிலையில் இருந்தேன்” என்று முதலில் கூறியுள்ளீர்கள். அதன்பின் “ எங்கட ஆட்களே நான் தோத்து விட்டேன் என்றார்கள். அதற்கு நான் அப்படியா சரி என்று கூறினேன்” என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் இரண்டாம் நிலையில் உள்ள உங்களை தோத்துவிட்டதாக எப்படி உங்கட ஆட்களே கூறினார்கள்? அதை நீங்கள் ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்?

Balan chandran