ஒரு கேள்வி,இரு பதில்கள்…

92
[poll id= “2”]

திரு கஜேந்திரகுமார் அவர்களும் , திரு சுமந்திரன் அவர்களும் ஏறத்தாள ஒரே காலப்பகுதியில் இரண்டு ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியின் சிலபகுதிகளை இங்கு ஒப்பிட்டு நோக்கலாம்.

ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

முடிவு உங்களிடம்.

(வைத்திய கலாநிதி. தி. பாலமுருகனின் முகநூலில் இருந்து பிரதி செய்யப்பட்டது)

————————————-

1) Sunday Leader (19/04/2015) :- தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளையும் அவர்களின் கொள்கைகளையும் ஆதரிக்கின்றது என்கிற‌ ஒரு குற்றச்சாட்டு உண்மையானதா??

சுமந்திரன் : இல்லை , விடுதலைப்புலிகளில் எங்களுக்கு எந்த வித விசுவாசமும் இல்லை.

அவர்களின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை.

நாங்கள் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்றோம்.

நாங்கள் பயங்கரவதத்திற்கு ஆதரவானவர்களும் இல்லை அதை ஊக்குவிப்பவர்களும் இல்லை.

/// (இவரின் இந்த பதிலைப் பார்த்தவுடன் “தமிழர்களின் பிரச்சினை வேறு புலிகளின் பிரச்சினை வேறு” என்கிற ஜே ஆர் ஜெயவர்தன , அத்துலத் முதலி, காமினி திஸநாயக்க, பிரேமதாஸ டி.பி விஜேதுங்க , சந்திரிக்கா, ரத்வத்த, மகிந்த ராஜபக்ஷ , கோத்தபாய ராஜபக‌ஷ, ரணில் விக்கிரமசிங்க , மங்கள சமரவீர , மைத்திரிபால சிரிசேன, நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர், கருணா, டக்ளஸ் ஆகியோர் பாவிக்கின்ற மிகப்பிரபலமான கூற்று உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) //

//(இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில், புலிகளை ஆதரிக்கிறேன் என்று எவரும் சொல்லவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த கேள்வியில் சண்டே லீடர் எந்த இடத்திலும் புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்று கேட்கவில்லை என்பதையும் சுமந்திரன் தானாக சென்று பயங்கரவாதம் பற்றி என்பதையும் கவனிக்கவும்) ///

2) Ceylon Today (21/04/2015) :-

நீங்கள் புலிகளினதும் புலமெபெயர் தமிழர்களினதும் அரசியலை (கோட்பாடுகளை) கொண்டு செல்கிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அத்தோடு நீங்கள் கொள்கை ரீதியில் ஒரு அதிதீவிரவாதி (extremist) என்றும் அரசியலில் { கொள்கைகளில் } விட்டுக்கொடுப்பற்றவர் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ??

கஜேந்திரகுமார் :- சிறிலங்கா ஒரு பல்தேசமுள்ள (multi national country) நாடாக இருக்க வேண்டும் என்பதில் என்ன அதி தீவிரம் இருக்கிறது??

கனடா போன்ற ஒரு அரசியலமைப்பை எதிர்பார்ப்பதில் என்ன அதி தீவிரம் இருகிறது ??? (அது – ஆங்கிலக் கனடா கியுபெக் ஆகிய) இரு தேசங்களை ஒரு நாட்டுக்குள் அங்கீகரிக்கிற‌து. TWO NATION IN ONE COUNTRY .

எண்ணிக்கையில் பெரும்பான்மையான ஒரு தேசிய இனம், எண்ணிக்கைக்கையில் சிறுபான்மையான ஒருதேசிய‌ இனத்தை அடக்கியாளாக்கூடாது என்று அது சொல்கிறது.

சிறிலங்கா ஒரு சிங்கள பெளத்த நாடு இல்லை என்று சொல்வதில் என்ன அதி தீவிரம் இருக்கிற‌து?

அது சிங்களவர்களுக்கு மட்டுமானது இல்லை , அது தமிழர், முஸ்லிம்கள் மலையகத்தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவானது என்றால் அது அதி தீவிரமா??

நாங்கள் தனியான ஒரு நாட்டைக் (seperate state) கேட்கவில்லை.

நாங்கள் தமிழர்களின் தனித்துவ இன அடையாளத்தை அங்கீகரித்து அவர்களை ஒரு தேசிய இனமாக ஒரு தேசமாக (nation) அங்கீகரிக்கும்படிதான் கேட்கிறோம்.

பல்தேசமுள்ள நாடாக இலங்கை பரிணமிக்கும்வரை எமது போராட்ட வழிமுறையை நாம் தொடருவோம்.

எங்களைப்பொறுத்தவரை இக்கோரிக்கைகள் அதி தீவிரவாதம் அல்ல.

ஆனால், இந்த கோரிக்கைகளுக்காக எம்மை நீங்கள் அதிதீவிரவாதிகள் என்று சொன்னால், பரவாயில்லை , நாங்கள் அந்த “லேபலையும் ” (label) ஏற்க தயாராக இருக்கிறோம்.

Sivavathani P