சுமந்திரன் 15 Top பொய்கள்…

182

தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் திரு சுமந்திரன் அவர்கள் உண்மை . நேர்மை , வெளிப்படைத்தன்மை , நீதி இவற்றின் மறுவடிவம் என குறிப்பிட்டு ஒரு தேர்தல் சுவரொட்டி ஒன்று சமூக தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. திரு சுமந்திரன் அவர்களை உண்மையின் மறுவடிவமாக பார்ப்பவர்கள் பதில் சொல்ல வேண்டிய சில கேள்விகள் .

1. இடைக்கால அறிக்கையில் சமஸ்டி இருக்கிறது என வடக்கு கிழக்கு மேடைகளில் சொல்லி வந்தது உண்மையா ?

2. இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக ஏமாற்றியது பொய் தானே ?

3. அரசமைப்பு பேரவையாக கூடிய பாராளமன்றத்தில் சமஸ்டியின் அடிப்படை பண்பான இறைமை பகிரப்பட்ட தேவை இல்லை என சொன்ன பாராளமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மேடைகளில் பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் தீர்வு பிரச்சாரம் பொய் தானே ?

4. நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சியில் தெற்கின் அரசியல் கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடு இருப்பதாக சொன்னது உண்மையா ?

5. ஜெனீவா Fact Finding அறிக்கையில் Investigation Report என சொல்லப்பட்டு இருப்பதால் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை முடிந்து விட்டது சொன்னது உண்மையா ?

6.2015 பொது தேர்தல மேடைகளில் சர்வதேச விசாரணை வேண்டும் என முழக்கமிட்ட , சம காலத்தில் சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்கும் பொது சர்வதேச மேற்பார்வை வேண்டும் என சொன்னார்கள் ..ஊடகங்களிடம் சர்வதேச விசாரணையும் சர்வதேச மேற்பார்வையும் ஒன்று என வியாக்கியானம் செய்தது பொய் தானே ?

7. மாமனிதர் ரவிராஜ் வழக்கு , குமாரபுரம் கொலை வழக்கு , திருகோணமலை 5 மாணவர் படுகொலை வழக்கு போன்ற எண்ணற்ற வழக்குகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட எந்த கூச்சமும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையில் அரசாங்க தலையீடு இல்லை என சொன்னது உண்மையா ?

8. மணலாறு, வவுனியா , மட்டக்களப்பு , திருகோணமலை என பல மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கலும் நடக்க நல்லாட்சி அரசாங்கத்தில் சிங்கள குடியேற்றம் நடக்க வில்லை என சொன்னது உண்மையா ?

10. தொல்லியல் திணைக்களம் தொடக்கம் வன வளத் திணைக்களம் வரை காணிகளை அபகரிக்க அரசாங்கத்தோடு சேர்ந்து நின்று கொண்டு 80 % ஆன காணிகள் விடுவிக்கப்பட்டதாக சொன்னது உண்மையா ?

11. பிராந்தியங்களின் ஒன்றியம் என்கிற சந்திரிகா அரசாங்கத்தின் தீர்வு திட்டத்தில் சமஸ்டி இருந்ததாக சொன்னது பொய் தானே ?

12. கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் ஐ நா மனித உரிமை பேரவையில் நிராகரித்து விட்ட பின்னரும் அரசாங்கத்தோடு இணைந்து கால நீடிப்புக்கு துணை போன .அதே சமயம் வடக்கு கிழக்கு மேடைகளில் கால நீடிப்பு அல்ல ஐ நா மேற்பார்வை என கதை சொன்னது பொய் தானே ?

13. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் திரு ரணில் விக்ரமசிங்கே சமஸ்டி அரசியல் அமைப்பு வெளிப்படையாக அறிவித்து இருந்தார் என சொன்னது பொய் தானே?

14. 2015 ஜனாதிபதி தேர்தலில் திரு மைத்திரிபால சிறிசேனா சமஸ்டி அரசியல் அமைப்புக்கு இணங்கி இருந்தார் என்று சொன்னது பொய் தானே ?

15. திரு ரணில் விக்ரமசிங்கே தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து கொண்ட தலைவர் என சொன்னது பொய் தானே ?

தேர்தலில் வெல்லுவதற்க்காக பல்வேறுபட்ட பிரச்சார உத்திகளை உபயோகிப்பது இயல்பானது தான்

ஆனால் சமாதான நீதிவான் பட்டம் , தேர்தல் சீட்டு , ஊர் அதிகாரம் , அரச வேலைக்கு சிபாரிசு போன்ற தனிப்பட்ட நலன்களுக்காக வலி சுமந்து நிற்கும் அப்பாவி மக்களிடம் மனசாட்சிக்கு விரோதமாக பொய்களை பரப்பாதீர்கள்

ஜனநாயக அரசியலில் அப்பாவி மக்களை நம்பிக்கை இழக்க செய்யாதீர்கள்

நன்றி – இனமொன்றின் குரல்