சுமந்திரன் தாக்கப்பட்டாரா! வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்!

236

வவுனியாவில் கூடிய தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தில் கட்சிக்கு புதிய செயலாளரை பரிந்துரை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது,அத்துடன் தேசியபட்டியல் தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டமோ நபரோ பிரச்சினை இல்லை என்றும்,தேர்ந்தெடுக்கப்பட்டமுறைகளல்தான் தவறுள்ளது எனவும் பரவலாக சுட்டிகாட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் சுமந்திரன் தரப்பு முற்றாக ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,மாவை தரப்பின் கை ஓங்கியிருந்தமை,தமிழரசு கட்சி வடக்கு நோக்கிய மையப்படுத்தபட இருக்கின்றது என்பதை காட்டுகின்றது.மேலும் சுமந்திரனுக்குரிய சகல அதிகாரங்களும் பறிக்கப்பட்டு,சாதாரண எம்பியாக மட்டுமே பார்க்கப்படும் பரிதாப நிலையை எட்டியுள்ளார்.அவர் வழியை நம்பி சென்ற சிறிதரனுக்கும் இதே நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதால்,சிறிதரன் மறுபடியும் இந்த பக்கமாக தாவும் முடிவுடன் இருப்பதாகவும்,உள்வீட்டு தகவல்கள் தெரிவிகின்றன!

மேலும் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுகொண்டு விட்ட இடத்தை பிடிக்க,மாகாணசபை தேர்தலில் மீள்வருகையை காட்டி,தமிழரசு கட்சி மீண்டும் வெற்றி பாதையை நோக்கி காய்கள் நகர்த்தப்படுகின்றன.மாவையின் முதல்வர் கனவும் போலி அதிகார வெறியும்,தமிழரசு கட்சியை சுமந்திரன் அழித்ததை விட அதிகமாக அழிக்கும் என்பதே உண்மை!