நிறத்தை மாற்றும் அரசியல் ஓணான்!

313

யாழ்ப்பாணம் தனியொரு கட்சிக்கான சீதனமாக வழங்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார் சுமந்திரன்.மேலும் சிறிலங்காவில் இராணுவ ஆட்சி பரந்தளவில் விஸ்தரிக்கப்படுவது ஆரோக்கியமான ஒரு விடயமல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார் சுமந்திரன்,

மிஸ்டர் சுமந்திரன்,யாழ்ப்பாணம் தனியொரு கட்சிக்கு சீதனம் இல்லை என்று ஏன் இதற்கு முதல் உங்களால் சொல்லமுடியவில்லை,பின்னர் எதற்காக 20 ஆசனங்கள் வடகிழக்கு முழுக்க கூட்டமைப்புக்கு கேட்டீர்கள்? புலிகள் பெயரை சொல்லி வடக்கு கிழக்கை சீதனமாக கூட்டமைப்பு எச்சை எம்பிக்கள் 10 வருடங்கள் அனுபவித்தது எதன் அடிப்படையில்? இன்று தேர்தலில் இறுதி நேர சுத்துமாத்தல்களில் வென்றதாக காட்டி,வடகிழக்கு பெரும்பான்மையை இன்று இழந்துவிட்டு அடுத்தவர்கள் மேல் எவ்வாறு பழி போடுவீர்கள்? உங்களின் சீதன சொத்து கைமாறி பங்காளர்கள் வந்துவிட்டதால்,இன்று உங்களுக்கு கசப்பாக இருக்கின்றது,பதட்டபடுகின்றீர்கள்,கோபபடுகிறீர்கள்,இவை எல்லாம் நடக்க காரணமும் நீங்கள்தானே! தவிர கூட்டமைப்பு பேச்சாளர் பதவியும் உங்களின் சீதனமல்ல!

அடுத்து சிறிலங்கா இராணுவ ஆட்சியை நோக்கி நகருகின்றது என்று கூறுகிறீர்கள்.ஆனால் இராணுவ பாதுகாப்போடு பல்வேறு பாதுகாப்பு எடுபிடிகளோடுதானே உங்களால் வாழ முடிகின்றது.அதே இராணுவம் இல்லையென்றால் அன்று வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து உங்களால் வேட்டியுடன் திரும்பி இருக்கமுடியுமா? இவ்வாறு உங்களின் தேவைகள் திட்டங்களுக்கு எல்லாவற்றுடனும் இயைந்து செல்லும் நீங்கள்,பொதுவெளியில் இவ்வாறு உங்களின் அரசியல் தேவைக்காக பொய்களை அள்ளிவிடுவது நல்லதல்ல,மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள்,சில ஆயிரங்கள் வாக்குகளை ஏமாற்றி வாங்கிய உங்களது நினைப்புக்கள் ஒரு இலட்சம் வாக்கு வாங்குவேன் என்று அன்று பொய் சொன்னது போல்தான்.இவ்வாறு காலத்துக்கு காலம் உங்களின் இருப்பை நீடிக்க நீங்கள் செய்த சொன்னவை எல்லாம் உங்களை நோக்கியே வர ஆரம்பித்துள்ளன,வாழ்த்துக்கள் சுமந்திரன்!