மாவீரர் தின ஏற்பாடுகளில் திடீரென உள்நுழைந்த சுமந்திரன் தரப்பு,ஆட்டத்தை தமது கையில் எடுப்பதில் காட்டும் கரிசனைகள் வியக்க வைக்கின்றது.நீதிமன்றங்களில் போட்டப்பட்ட தொடர்ச்சியாக வழக்குகள்,சூட்டோடு சூடாக வழக்காடிய விதங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி வேறுவழியில்லாமல் தமது அரசியல் இருப்பை தக்க வைக்க காய் நகர்த்துக்கின்றனர்.தமிழர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் மாவீரர் தினம் தவிர்த்து வேறு ஒன்றில்லை என்பது அவர்களுக்கு சரியாக தெரிந்திருக்கின்றது.
இதுவரை நாட்களும்,விடுதலை புலிகள் போர்குற்றத்தில் ஈடுபட்டனர் என்றும் சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்றும்,சிங்களமக்களுடன் ஒன்று சேர்ந்து வாழவேண்டும் இலங்கை ஒருநாடு என்றும் சிங்கள மண்ணில் கொழும்பில் சிங்களவர்களுடன் வாழ்ந்தது பற்றி பெருமையடைவதாகவும் சொல்லி திரிந்த சுமந்திரன்,புலிகள் என்னை கொல்ல திட்டமிடுகிறார்கள் என்றும் புலிகள் பெயரை கூட உச்சரிப்பதை தவிர்த்து “அவர்கள்” என்று இதுவரை விளித்து வந்த சுமந்திரன் இன்று மாவீரர் படத்துக்கு விளக்கு கொழுத்தி வணக்கம் செலுத்துகின்றார்.செலுத்த வேண்டிய நிலைமை!
புலி எதிர்ப்பு வட்டம்,ஒட்டுக்குழுக்கள்,One nation சிறிலங்கா கிரிக்கெட் வாசகர்கள்,இலக்கிய வட்டங்கள்,நடுநிலைநக்கிகளின் போராளியாக இருந்த சுமந்திரன்,இன்று இவர்களை கைவிட்டுவிட்டு மாவீரர் நாள் என்று விரும்பியோ விரும்பாமலோ திரிகின்றார்.அல்லக்கைகளினால் எதுவுமே ஆக போவதில்லை என்று நன்கு தெரிந்து வைத்துள்ள சுமந்திரன் வரவேண்டிய இடத்துக்குதான் தெரிந்தோ தெரியாமலோ வந்திருக்கின்றார்.எங்களுக்கு சுமந்திரன் தேவையில்லை,அவருக்குதான் நாங்கள் தேவைப்படுகின்றோம்.
சுமந்திரன் மட்டுமல்ல,எதிரிகள் துரோகிகள் ஆயுதம் கொடுத்தவர்கள்,உளவு பார்த்தவர்கள்,கூட இருந்து குழி பறித்தவர்கள் என்று அத்தனை பேரும் இந்த நிலைமைதான் ஏற்படும்.வரலாறு காட்டும் பாடமும் இதுவே,இவ்விடம் மானமாவீரர்களின் மகத்தான உணர்வுகள் பதிந்த இடம்.இங்கு கயவர்களுக்கு இடமில்லை,இவர்கள் இங்கு வந்து தமது தவறான நோக்கங்களை சாதித்து கொள்ள ஒருநாளும் முடியாது என்பது திண்ணம்!
- பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு நாள்
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரித்தானியா
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நிகழ்வுகள் பிரித்தானியா
- அன்றே கூறினாா் எம் ஈழத்தின் கவிஞா்
- லன்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு