#அடுத்த 5 வருடத்தில் முழுமையாக தேசிய புலி நீக்க அரசியல் செய்வதற்கு காத்துக்கொண்டிருக்கும் இரண்டு கழுகுகள்.
ஒருவர் தன்னைத்தானே தலைவர் என்கிறார் அடுத்தவரை அன்டன் பாலசிங்கம் என்கிறார்.தமிழ் தேசியத்துடன்
பயணித்தவர்களின் பெயர்களை ஏற்றுக் கொள்ளும் இவர்கள்.ஆனால் புலி தேசிய அரசியலை மிகவும் சிறப்பாக செய்கிறார்கள் தமிழ் மக்கள் மத்தியில்…
#இந்த இருவரும் வெற்றியடைந்தால் அடுத்த 5 வருடத்தில் முழுமையாக எமது ஆயுதப் போராட்ட வரலாறு உட்பட எமது அர்ப்பணிப்பு தியாகங்கள் அனைத்தும் தமிழ் மக்கள் மனதில் இருந்து அழிப்பதற்கான முழு முயற்சியை இருவரும் தேசியக் கட்சிகளுடன் இணைந்து நிறைவேற்றுவார்கள்.ஆனால் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தேசியத்தை தூக்கிச் செல்கிறார்கள்.காத்திருக்கிறார்கள் மீனை கொத்திச் செல்லும் கழுகுகள் போல் வெற்றியின் பின் தமிழ் தேசியத்தை அழிப்பதற்கு….
#கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களுக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ன செய்தோம் என்பதை சொல்லி வாக்குக் கேட்பது தவிர்த்து. முழுவதுமாக தேசியம் பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள் ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடைகளிலும்.காலங்காலமாக இவர்களின் பேச்சை நம்பிய மக்கள் வாழ்க்கையை தொலைத்து வலிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஏமாற்றும் இந்த அரசியல் தலைமைகளை மக்கள் புரிந்து கொள்ளாத வரை நிச்சயம் மக்களுக்கு இந்த அரசியலின் ஊடாக எந்தவிதப் பயனுமில்லை…
#இதுவரை வடக்கு கிழக்கு தமிழர்கள் சந்திக்காத ஒரு தேர்தல் இது.இந்தத் தேர்தல்தான் ஒட்டுமொத்த எமது இனத்தின் அடுத்த இருப்புக்கான வாழ்வுக்கான அடையாளத்திற்கான அபிவிருத்திக்கான தேர்தல்.உங்கள் கையில் இருக்கும் வாக்கு என்னும் ஆயுதத்தை பயன்படுத்த கிடைத்த இறுதிச் சந்தர்ப்பம் இந்த தேர்தல் மிகச்சரியான அவர்களுக்கு வாக்கை செலுத்துங்கள்…
#சுகபோக வாழ்க்கை கண்டு சுதந்திரமாக அரசியல் செய்யும் கூட்டமைப்பு முதிர்ந்த கூட்டம் உட்பட அதிகமானவர்கள் இந்த தடவை தூக்கி எறியப்பட படவேண்டியவர்கள்.இந்த சந்தர்ப்பத்தை இந்த முறை எமது மக்கள் சரியாக பயன்படுத்தாவிட்டால் நிச்சயம் எப்பொழுதுமே எமது தமிழ் இனத்தை இந்த கூட்டமைப்பிடம் இருந்து பாதுகாக்க முடியாது….
#யுத்த முடிவின் பின் இரண்டு தேர்தல்கள் 10 வருட ஆளுமை எதை சாதித்தார்கள் தமிழ் மக்கள் சார்ந்தது திரும்பிப் பார்த்தால் எதுவுமே இல்லை.இதுதான் கூட்டமைப்பின் அரசியல் வரலாறு மீண்டும் இந்த வரலாறு உங்களுக்குத் தேவையா தேவையென்றால் தெருவோரம் நிற்கப் போவது எமது இனம் தான்…
#கடந்தகாலத்தில் வீட்டுச் சின்னத்திற்கு ஓட்டு போட்டவர்கள் லட்சத்திற்கு அதிகமானவர்கள் இன்று கூடாரத்தில் வாழ்கிறார்கள் வடக்கு-கிழக்கில் இவர்கள் மீண்டும் வெற்றி பெற்றால் உங்கள் கூடாரம் உங்களுக்கு எப்பொழுது நிரந்தரம் தான்.
வெறுமனே உணர்ச்சி அரசியல் பேச்சில் மயங்கி உணர்ச்சிவசப்பட்டு கடந்தகால தவறுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள் அரசியல் தலைமைகளை தெரிவு செய்வதில்…
#எனது அருமை உறவுகளே கடந்த காலத்தில் இந்த மக்களின் வலிகளுடன் பயணித்தவன் இன்றும் அந்த மக்களின் வலிகளுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.எமது மக்கள் கடந்தகால வலிகளை தொலைத்து வசந்தமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமே எந்த எதிர்பார்ப்புகளும் அரசியல் லாப நோக்கமற்று பதிவுகளை பதிவு செய்கிறேன் அரசியல் மாற்றம் ஒன்று தேவை தமிழ் மக்களுக்கு.அந்த மாற்றம்தான் வரப்போகும் புதியவர்கள் தான் குறைந்தபட்சம் மாற்றத்தை உண்டு பண்ணுவார்கள் என்று அதிகம் நம்புகிறேன் கடந்த காலத்தில் பயணித்தவர்களைவிட…
#ஆகவே சிந்தியுங்கள் சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் எதிர்காலத்தில் சிறந்த ஒரு அரசியலை உருவாக்குவதற்கு.உங்களின் அரசியல் என்றுமே உங்களின் கைகளில்…
#எனது இந்த கருத்து சரி என்று படும் உறவுகள் பகிர்ந்து கொள்ளுங்கள் ஏனையவர்களும் புரிந்து கொள்ளட்டும்…