தூங்க சென்ற சுமந்திரன்,இரவு ஓட்டை பிரிப்பாரா..!

192

இன்று காலையில் நேரத்திற்கே குடத்தனை பாடசாலையில் வாக்களித்த சுமந்திரன்,உடனேயே அங்கிருந்து புறப்பட்டதாக குடத்தனை நிருபர் வண்டுமுருகன் ஒரு பேப்பருக்கு தெரிவித்துள்ளார்.சாதாரண காவல்துறை பாதுகாப்புடன் வந்த சுமந்திரன் தனது கையினால் வாக்கை செலுத்தியுள்ளார்.விருப்புவாக்குகள் யாருக்கு போட்டிருப்பார் என்ற எமது கேள்விக்கு பதிலளித்த வண்டுமுருகன்.அவர் விரும்புற மாதிரி யாருமில்லை என்பதால் அவர் தனக்கு தானே எல்லா விருப்பு வாக்குகளையும் போட்டிருப்பார் என்று ஊகிப்பதாக கூறினார்.மேலதிகமாக விடுப்பு கேட்கலாம் என்று வண்டுமுருகனை நாம் நோண்டிய போதும்.. அவருக்கு காலையில் சாப்பிட்ட புட்டும் கருவாடும் லேசாக வேலை காட்ட தொடங்கியுள்ளதால்..வண்டு முருகன் அவசரமாக களத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.